அத்தை இறந்ததுக்கு காரணமே நீ தானே, இப்போ இங்க வந்து எதுக்கு கத்துற?? கண்ணனை கண்டபடி கிழிக்கும் தனம்!!

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்றைய எபிசோடில் கண்ணன் வந்து வீட்டில் உள்ள அனைவரையும் திட்ட ஆரம்பிக்க தனம் கோவமடைகிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் லட்சுமி இறந்ததை அடுத்து பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. அதாவது ஐஸ்வர்யா கண்ணனை ஏற்றி விடுகிறார். நீ வரத்துக்கு முன்னாடி வேணும்னே இப்படி பண்ணிட்டாங்க மாமா என்று சொல்ல கண்ணனுக்கு உச்சகட்ட கோவம் வருகிறது.

இதனால் வீட்டிற்கு செல்கிறார். வீட்டு வாசலில் அம்மா என்று கதறுகிறார் கண்ணன். வீட்டில் உள்ளவர்கள் கண்ணனை பார்த்து எதுவும் பேச முடியாமல் தவிக்கின்றனர். கண்ணன் அனைவரிடமும் கண்டபடி கேள்வி கேட்கிறார்.

எங்க அம்மாவை பார்க்க விடாம பண்றதுக்கு நீங்க எல்லாரும் யாரு என்று கேட்கிறார்.இனி எங்க அம்மாவை எங்கன்னு போயி பாப்பேன்.ஐயோ என்று கதறுகிறார்.நான் பண்ணது பெரிய தப்பு தான் அதுக்கு ஏன் இவ்வளோ பெரிய தண்டனை கொடுத்தீங்க என்று சொல்கிறார்.

ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமை இழந்த தனம் வாயை மூடு டா என்று கத்துகிறார். இந்த வீட்டுல இருக்குறவங்கள பத்தி உனக்கு தெரியாதா?? நீ எப்போ வருவ எங்க போன எதுவுமே எங்களுக்கு தெரியாது என்று சொல்கிறார். அதுக்கும் மேல இப்படிலாம் நடந்ததுக்கு காரணம் நீ தானே.

நீ உன்ன பத்தி மட்டும் யோசிச்சு ஒரு முடிவை எடுத்துட்ட அதனால கஷ்டப்பட்டது இந்த குடும்பம் தான். இத்தனை நாலு அத்தை சாப்பிடமா இருந்தாங்க தெரியுமா?? இப்போ யாராலயும் அவங்கள பாக்க முடியாது என்று கதறுகிறார்.மேலும் கண்ணன் அம்மாவின் நினைப்பிலேயே வீட்டிற்கு சென்று கதறுகிறார்.இதோடு எபிசோடும் முடிவடைகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here