‘நான் கால் பண்ணா எடுத்து பேசி தான் ஆகணும், எனக்கு இதெல்லாம் சுத்தமா பிடிக்காது’ – ஐஸ்வர்யாவிடம் உண்மை முகத்தை காட்டிய பிரஷாந்த்!!

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது கண்ணன் ஐஸ்வர்யா காதலித்து வர இதனை கஸ்தூரி மூர்த்தியிடம் சொல்லி வீட்டில் பெரிய பிரச்சனை ஏற்படுகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணனும், ஐஸ்வர்யாவும் கோவிலுக்கு பின்னால் பேசிக்கொண்டிருக்க அதனை பார்த்த கஸ்தூரி இருவரையும் மிரட்டி விட்டு நேராக மூர்த்தியிடம் வந்து சண்டையிடுகிறார். நிச்சயம் ஆன பொண்ணு கூட உனக்கு என்ன பேச்சு என்று அனைவரும் கேவலமாக திட்டுகின்றனர். அதுவும் மூர்த்தி இனிமேல் ஐஸ்வர்யாவிடம் ஒரு வார்த்தை கூட நீ பேச கூடாது என்று ஸ்ட்ரிக்ட்டாக கூறி விடுகிறார்.

பேசியதற்கே இவ்வளவு பிரச்சனை என்றால் இருவரும் காதலிப்பது தெரிய வந்தால் இன்னும் என்ன பிரச்சனை வர போகிறதோ என்று முழித்து கொண்டிருக்கிறார் கண்ணன். கண்ணனின் அம்மாவும் அவரை கேவலமாக திட்டுகிறார். சின்ன வயதில் இருந்து கஷ்டம் தெரியாம வளர்ந்ததால இப்படி இருக்கியா?? என்று சொல்கிறார்.

அடுத்ததாக மீனா, தனம், முல்லை அனைவரும் கண்ணனை பற்றி பேசிகொண்டுள்ளனர். தனம் கண்ணன் செய்த காரியத்தை நினைத்து புலம்பி கொண்டுள்ளார். நிச்சயம் ஆன பெண் உடன் இவனுக்கு என்ன பேச்சு என்று சொல்கிறார். அதற்கு மீனா ஐஸ்வர்யாவுக்கு கண்ணனை தான் புடுச்சு இருக்கு போல இரண்டு பேரும் லவ் பண்றங்களோ என்று சொல்கிறார். இதனால் அனைவரும் ஷாக்காகின்றனர்.

அப்படி எல்லாம் எதுவும் இருக்காது. அப்படி இருந்தாலும் அவளுக்கு நல்ல வாழ்க்கை அமையுதுனு விலகிடனும் என்று சொல்கிறார் தனம். இதனை தூரத்தில் இருந்து கேட்டு துடித்து போகிறார் கண்ணன். ஐஸ்வர்யா கண்ணனுக்கு கால் செய்து பேசுகிறார். அப்பொழுது கண்ணன் நடந்தவற்றை சொல்கிறார். ஐஸ்வர்யாவிற்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. அப்பொழுது பிரஷாந்த் கால் செய்ய அதனை எடுக்கவில்லை. நேராக கஸ்தூரி போன் அடிக்கிறார். கஸ்தூரி வந்து ஐஸ்வர்யாவை திட்டுகிறார்.

எடுத்து பேச சொல்லி வற்புறுத்துகிறார். அடுத்து பிரஷாந்த் கால் செய்ய ஐஸ்வர்யா எடுத்து பேசுகிறார். எதுக்கு போன் எடுக்கல, அப்போ எனக்கு என்ன மரியாதை, யார் கிட்ட இவளோ நேரம் பேசிட்டு இருக்க என்று கண்டபடி திட்டுகிறார். மேலும் ‘நான் போன் பண்ணா எடுத்து பேசித்தான் ஆகணும் இதெல்லாம் எனக்கு சுத்தமா பிடிக்காது’ என்று சொல்கிறார். இதோடு எபிசோடு முடிவடைகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here