லட்சுமி இறந்த விஷயத்தை அறிந்து கதறிக்கொண்டே வீட்டிற்கு வரும் ஐஸ்வர்யா – உள்ளே விட மறுக்கும் பார்வதி!

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது லட்சுமி இறந்ததை அடுத்து பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. அதுவும் ஐஸ்வர்யா விஷயம் தெரிந்து வீட்டிற்கு வர பார்வதி அவரை துரத்துகிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது லட்சுமி இறந்த விஷயம் தெரிந்து அக்கம் பக்கத்தினர் விரைந்து வருகின்றனர். முல்லையின் அம்மா, அப்பாவிற்கு விஷயம் தெரிய அவர்களும் கதறிக்கொண்டே ஓடி வருகின்றனர். தன் அக்கா இறந்து கிடப்பதை பார்த்து கதறுகிறார் முருகன்.

மேலும் தெரிந்தவர்கள் அனைவரும் வீட்டிற்கு வந்து விடுகின்றனர். அடுத்ததாக சூப்பர் மார்க்கெட்டில் ஐஸ்வர்யா வேலை பார்த்து கொண்டுள்ளார். அப்பொழுது ஜெகா ஜனார்தனனுக்கு கால் செய்து நடந்த விஷயத்தை பற்றி சொல்கிறார். இதனை கேட்டு ஜனார்த்தனன் ஷாக்காகிறார்.

ஐஸ்வர்யா என்ன ஆச்சு என்று கேட்க அதற்கு ஜனார்த்தனன் நடந்த விஷயத்தை பற்றி சொல்ல ஐஸ்வர்யா இடிந்து விழுகிறார். இப்படி ஆகிவிட்டதே என்று கதறுகிறார். கண்ணனுக்கு இபொழுது கால் கூட செய்ய முடியாது. இதனால் வீட்டில் உட்கார்ந்து கதறுகிறார் ஐஸ்வர்யா. தன்னால் தான் இப்படி ஆகி விட்டதோ என்று அழுகிறார்.

ஒரு கட்டத்தில் மயக்கம் போட்டே விழுகிறார். பார்வதி மல்லிக்கும் கால் செய்து நடந்தவற்றை சொல்ல அவரே ஷாக்காகிறார். மேலும் ஐஸ்வர்யா கண்ணனுடன் இருப்பவருக்கு கால் செய்ய அவருக்கும் ரீச்சாகவில்லை.

இங்கேயே இருந்தால் தப்பாகி விடும் என்று தைரியத்தை வரழைத்து கொண்டு வீட்டிற்கு செல்கிறார். அங்கு அனைவரும் கோவமாக இருக்க பார்வதி உள்ளே விட மறுக்கிறார். இதோடு எபிசோடும் முடிவடைகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here