‘குழம்பு கேட்குற சாக்குல குடும்பத்தோட ஒட்டிக்கலாம்னு பிளான் போடுறியா’ – ஐஸ்வர்யாவை அசிங்கப்படுத்தி அனுப்பும் தனம்!!

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது ஐஸ்வர்யா கண்ணன் குடும்பத்துடன் எப்படியும் சேர்ந்து விட வேண்டும் என்று மூர்த்தி குடும்பத்தை வம்பிழுத்து கொண்டே உள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நேற்றைய எபிசோடில் தைரியமாக மூர்த்தியை காபி குடிக்கிறிங்களா மாமா என்று கேட்க கோபமடைந்த அவர் வேகமாக கடைக்கு செல்கிறார். இதனை பார்த்த மீனா மிரண்டு போகிறார்.

இந்நிலையில் கண்ணன் வரவு செலவு கணக்குகளை பார்த்து கொண்டுள்ளார்.  அப்பொழுது தன் வீட்டு நியாபகம் வருகிறது. இப்படி தான் எங்க அண்ணனும் செய்வாங்க என்று சொல்கிறார். அப்பொழுது தனம் வைக்கும் குழம்பு வாசனை தெருவே மணக்க கண்ணன் அண்ணியின் கைப்பக்குவம் அப்படி தான் என்று ஐஸ்வர்யாவிடம் புகழ்கிறார்.

தானும் அதே போல செய்து தருகிறேன் என்று சொல்ல கண்ணன் அதற்கு வாய்ப்பே இல்லை என்று சொல்கிறார். அப்படியென்றால் அவங்க கிட்டையே நான் வாங்கி தரேன் என்று சொல்கிறார். வீட்டுக்கு பின் பக்கமாக சென்று குழம்பு கேட்க இத சாக்கா வச்சு ஒட்டிக்கலாம்னு நெனச்சியா என்று சொல்கிறார்.

குழம்பு எல்லாம் உன் புருசனுக்கு நீயே வச்சு கொடு என்று சொல்கிறார். இதனால் ஐஸ்வர்யா சென்று விடுகிறார். அதன் பிறகு தனத்திற்கு மனசே கேட்கவில்லை. வீட்டில் அனைவரும் சாப்பிட்டு முடிந்ததும் இருக்கும் குழம்பை எடுத்து யாருக்கும் தெரியாமல் வெளியில் எடுத்து செல்கிறார். ஐஸ்வர்யா என்று கத்த அதை கேட்டு உள்ளே இருந்து மீனா வந்து ஷாக்காகிறார்.

ஐஸ்வர்யா வெளியே வந்ததும் சரண்யா என்று சமாளிக்கிறார். இதனை மீனாவும் பார்த்து சிரித்து விடுகிறார். ஐஸ்வர்யா குழம்பை எடுத்து செல்ல அதனை பார்த்த கண்ணன் சந்தோஷமடைகிறார். என் அண்ணி சமைச்சது என்று வேகமாக சாப்பிடுகிறார்.

அடுத்ததாக கண்ணன் ஐஸ்வர்யா காலேஜ்க்கு கிளம்ப அப்பொழுது கயல் தொட்டிலில் கதறி அழுது கொண்டிருக்க அதனை பார்த்து உள்ளே சென்று தூக்குகிறார். அப்பொழுது மீனாவும் வந்து விட கண்ணன் உள்ளே இருப்பதை பார்த்து என்ன செய்வது என்று தெரியாமல் உள்ளார். அதுமட்டுமில்லாமல் வேகமாக குழந்தையை தூக்கிக்கொண்டு வெளியே செல்கிறார். இதோடு எபிசோடும் முடிவடைகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here