கதிரை படிக்க விடாமல் தொடர்ந்து தொந்தரவளிக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் – கடுப்பாகும் முல்லை!!

0

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் இன்று கதிரை  மீதி நேரங்களில் படிக்க சொல்லி அறிவுறுத்துகிறார். அதே போல் மூர்த்தி கதிரின் டோர் டெலிவரி ஐடியா நன்றாக உள்ளது என்றும் பாராட்டுகிறார்.

“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல்

இன்று விஜய் தொலைக்காட்சியில் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் முல்லை சாப்பாடை எடுத்து கொண்டு கடைக்கு வந்து விடுகிறார். இதனை அடுத்து அனைவரும் டோர் டெலிவரி ஐடியா நன்றாக இருப்பதாகவும், கடையில் பழையபடி வாடிக்கையாளர்கள் வருகின்றனர் என்று மூர்த்தி முல்லையிடம் கூறுகிறார்.

தமிழகத்தில் ஊரடங்கின் போது பேருந்துகள் இயக்கப்படும் – போக்குவரத்துத்துறை அதிரடி!!

பின், அனைவரும் சாப்பிட அமர்ந்து விடுகின்றார். அப்போது, கதிர் தனக்கு பசிக்கவில்லை என்றும் தான் வேலை பார்க்கிறேன் என்றும் கூறி விடுகிறார். அப்போது மூர்த்தி மற்றும் ஜீவா இருவரும் சாப்பிடுகின்றனர். வேலை பார்க்கும் கதிருக்கு அப்போது மூர்த்தி ஊட்டி விடுகிறார்.

இப்படியாக இருக்க, முல்லை கடையை பார்த்து கொள்கிறார். பின், கதிர் மற்றும் முல்லை தனியாக கடையில் இருக்கின்றனர். முல்லை கதிரை படிக்க சொல்லி அறிவுறுத்துகிறார். கதிர் படிக்கும் போது அவருக்கு தூக்கம் வந்து விடுகிறார். அவருக்கு தண்ணீர் தெளித்து பாடம் சொல்லி கொடுக்கிறார்.

பின், அங்கு கண்ணன் வந்து இருவரையும் கலாய்த்து விட்டு போகிறார். பின், முல்லை மற்றும் கதிர் இருவரும் வண்டியில் செல்லுகின்றனர். அப்போது முல்லை தனியாக பேச வேண்டும் என்று கதிரிடம் கூறி மரத்திற்கு அடியில் கூட்டி செல்லுகிறார். அங்கு அமர்ந்து கதிரை படிக்க சொல்லுகிறார்.

இதனால் கதிர் ஷாக் ஆகிவிடுகிறார். கடையில் படிக்கலாம் என்றால் கண்ணன் வந்து தொந்தரவு செய்வதாகவும், வீட்டில் இருந்தால் யாராவது வந்து விடுகிறார்கள், அதனால் இங்கு அமர்ந்து படிங்கள் என்று முல்லை கூறுகிறார். அப்போது என்று பார்த்து கஸ்தூரி வந்து விடுகிறார். இதனால் முல்லைக்கு செம்ம காண்டு ஆகுகிறது. முல்லையின் கோபத்தை ரசித்து விட்டு கதிர் சென்று விடுகிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனை அடுத்து வீட்டில் அனைவரும் டோர் டெலிவரி முறையினை அப்படியே இன்னும் வளர்க்க வேண்டும் என்று அனைவரும் கலந்து ஆலோசிக்கின்றனர். இத்துடன் இன்றைய எபிசொட் முடிவடைந்து விடுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here