புதிய கதையம்சத்துடன் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’, ‘பாக்கியலட்சுமி’ இணையும் மெகா சங்கமம் – சூடுபிடிக்கும் கதைக்களம்!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலும், பாக்கியலட்சுமி சீரியலும் மீண்டும் மெகா சங்கமமாக இணையுள்ளது. இதனால் பலரும் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

விஜய் டிவி

விஜய் டிவியில் சீரியல்கள் அனைத்துமே டாப் ஹிட் தான். மேலும் மக்கள் விரும்புவதற்கு ஏற்றார் போல தான் இந்த சீரியலும் அமைந்திருக்கும். தற்போது லாக்டவுன் காரணமாக சீரியல்கள் அனைத்தும் நிறுத்தப்பட்ட நிலையில் மீண்டும் இன்றிலிருந்து புது எபிசோடுகளாக ஒளிபரப்பாக உள்ளது.

இதனால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். இந்நிலையில் டபுள் ட்ரீட் தரும் விதமாக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலும், பாக்கியலட்சுமி சீரியலும் இணைந்து மெகா சங்கமமாக ஒளிபரப்பாக உள்ளது.

ஏற்கனவே பாக்கியாவும் பாண்டியன் ஸ்டோர்ஸ் அண்ணன் தம்பிகளும் ஒட்டி பிறந்தவர்கள் போல இருப்பார்கள், இப்பொழுது மறுபடியும் இணைந்துள்ளது பலருக்கும் சந்தோசத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே மூர்த்தி குடும்பத்திற்கு கோபி மீது சந்தேகம் உள்ளது.

இப்பொழுது இந்த மெகா சங்கமத்தில் கோபி அவர்களிடம் மாட்டிக்கொள்ளவும் அதிக வாய்ப்பு உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். மேலும் புதிய கதையம்சமாக மல்லியும், அவரது மகன் பிரஷாந்தும் இணைந்துள்ளனர். அப்படி பார்த்தால் கண்டிப்பாக எதோ புதிய கதையம்சத்துடன் தான் கதை நகர போகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here