பாண்டியன் ஸ்டோர்ஸ், ரோஜா சீரியலுக்கு இப்படி ஒரு பெருமையா?? என்ன அடிவாங்குனாலும் நின்னு பேசுதே!!

0
பாண்டியன் ஸ்டோர்ஸ், ரோஜா சீரியலுக்கு இப்படி ஒரு பெருமையா?? என்ன அடிவாங்குனாலும் நின்னு பேசுதே!!
பாண்டியன் ஸ்டோர்ஸ், ரோஜா சீரியலுக்கு இப்படி ஒரு பெருமையா?? என்ன அடிவாங்குனாலும் நின்னு பேசுதே!!

வெள்ளித்திரையை காட்டிலும் இப்பொழுது சின்னத்திரைக்கு தான் அதிக முக்கியத்துவம் தரப்பட்டு வருகிறது. அதுவும் லாக்டவுன் சமயத்தில் இருந்து தான் சீரியலுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டது. ஏனெனில் படங்கள் எதுவும் வெளிவராத காரணத்தால் பொழுதுபோக்கிற்கு மக்கள் சின்னத்திரையில் கவனம் செலுத்த ஆரம்பித்தனர்.

மேலும் இப்பொழுது சீரியல்கள் அனைத்தும் பட ரேஞ்சுக்கு இருந்து வருகிறது. இதனால் பல சேனல்கள் போட்டிபோட்டு கொண்டு சீரியல்களை ஒளிபரப்பி வருகின்றனர். இப்படி இருக்க இப்பொழுது சில காலமாக 4 வருடங்களுக்கு மேல் ஒளிபரப்பாகும் சீரியல் லிஸ்டில் சன் டிவியில் ரோஜா சீரியலும்(1200 எபிசோடு), விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ்(1000 எபிசோடு) சீரியலும் இருந்து வருகிறது.

இரண்டு சீரியலுமே ஒரு காலத்தில் ஓஹோவென டிஆர்பி ரேட்டிங்கில் பின்னி பெடலெடுத்து வந்தது. இப்பொழுது காம்பெடிஷன் அதிகமானதால் ஓரளவிற்கு சுமாராக தான் போயிக்கொண்டுள்ளது. ஆனாலும் சீரியல் இந்த அளவிற்கு நல்ல பெயருடன் தாக்குபிடிப்பது கஷ்டம் தான். அதனை சாதித்து காட்டியுள்ளது இந்த சீரியல். இதனால் ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here