விஜய் டிவியின் புதிய சீரியலில் கமிட்டான பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம் – யாருனு நீங்களே பாருங்க!!

0

விஜய் டிவியில் அடுத்தடுத்து புதிய சீரியல்கள் எல்லாம் களமிறங்கி வரும் நிலையில் தற்போது புதிதாக தொடங்க இருக்கும் நம்ம வீட்டு பொண்ணு சீரியலில் பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலங்களும் களமிறங்கவுள்ளனர்.

நம்ம வீட்டு பொண்ணு

விஜய் டிவியில் தமிழும் சரஸ்வதியும் சீரியலை அடுத்து நம்ம வீட்டு பொண்ணு என்ற சீரியல் ஒளிபரப்பாக உள்ளது. இதில் பல முக்கிய பிரபலங்கள் நடிக்கவுள்ளனர். அதுவும் விஜய் டிவியின் பழைய பிரபலமான வெங்கட் நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய் டிவி இந்த சீரியலில் கம்பேக் கொடுத்துள்ளார்.

மேலும் இந்த சீரியல் பற்றிய எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே விஜய் டிவியில் டாப் ஹிட் சீரியல்கள் ஒளிபரப்பாகி வரும் நிலையில் இனி வரும் சீரியல் நிரந்தர இடத்தை பிடிக்குமா?? அல்லது பிளாப் ஆகுமா? என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். மேலும் இந்த சீரியல் பற்றிய கூடுதல் தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது இந்த சீரியலில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனாவிற்கு அப்பாவாக நடிக்கும் ஜனார்த்தனன் நடிக்கவுள்ளார். மேலும் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் இதற்கு முன்பு நடித்த வைஷாலி இதில் நடிக்கவுள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here