ஐஸ்வர்யாவிற்காக அடித்து கொள்ளும் கண்ணன், பிரஷாந்த் – ட்ரெண்டாகும் வீடியோ!!

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர்கள் அனைவரும் தற்போது இன்ஸ்டாவில் ரீல்ஸ் வெளியிடுவதையே குறியாக வைத்துள்ளனர். அந்த வகையில் கண்ணன் பிரஷாந்த் மற்றும் ஐஸ்வர்யா சேர்ந்து ரீல்ஸ் வீடியோ வைரலாகி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது ஐஸ்வர்யாவிற்கு பிரஷாந்துடன் நிச்சயம் நடந்த நிலையில் கண்ணனின் நிலை மிகவும் மோசமாக மாறியது. தனத்திடம் கண்ணன் கதறி அழுக அவர் என்ன நடக்கிறது என்றே புரியாமல் உள்ளார்.

அந்த பக்கம் ஐஸ்வர்யா எப்படி இந்த நிச்சயத்தில் இருந்து தப்பிப்பது என்று யோசித்து கொண்டுள்ளார். மேலும் தன் மீது கண்ணன் மாமாவிற்கு விருப்பம் உள்ளதா?? என்றும் தெரியவில்லையே என்று பதறுகிறார். கடைசியில் வெளியான ப்ரோமோவை பார்த்து தான் அனைவரும் திருப்தி அடைந்தார்கள்.

ஏனெனில் ஐஸ்வர்யா எப்படியோ கண்ணனிடம் தனது காதலை சொல்லி விடுகிறார். கண்ணனுக்கு அப்பொழுது தான் நிம்மதியே வருகிறது. நீ மட்டும் போதும் மாமா எனக்கு என்று ஐஸ்வர்யா கண்கலங்க கண்ணனும் ஐஸ்வர்யாவை ஏற்றுக்கொண்டார்.

ஆனால் பிரஷாந்த்தின் நிலைமை என்ன ஆக போகிறது என்றும் தெரியவில்லை. சீரியலில் தான் இந்த பிரஷாந்த்தும் கண்ணனும் நிஜத்திலும் அடித்துக்கொள்ள தான் செய்கின்றனர். அதாவது ரீல்ஸ் வீடியோ முழுக்க லவ் ஃபெயிலியர் மூடில் தான் வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது கண்ணன் பிரஷாந்த் செய்த ரீல்ஸ் வீடியோ வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by SaravanaVickram (@saravanavickram)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here