மேலும் பாண்டியன் ஸ்டோர்ஸில் இருந்து விலகும் நடிகை?? அப்போ மூட்டையை கட்ட வேண்டியது தான்!!

0
மேலும் பாண்டியன் ஸ்டோர்ஸில் இருந்து விலகும் நடிகை?? அப்போ மூட்டையை கட்ட வேண்டியது தான்!!
மேலும் பாண்டியன் ஸ்டோர்ஸில் இருந்து விலகும் நடிகை?? அப்போ மூட்டையை கட்ட வேண்டியது தான்!!

விஜய் டிவியில் மிகப்பெரிய ஃபேமஸான சீரியல் என்றால் அது பாண்டியன் ஸ்டோர் தான். இந்த சீரியல் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஆரம்பத்தில் இருந்து இப்பொழுது வரையிலும் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த தொடரில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகை லாவண்யா. இவருக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே இருந்து வருகிறது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இவரும் சினிமாவில் ஹீரோயினாக என்ட்ரி கொடுக்க இருப்பதாக சமூக வலைத்தளங்களில் முக்கியமான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, ஹஸ்ட்லர்ஸ் என்டர்டெயின்மென்ட் சார்பில் கார்த்திக் ஜெயாஸ் என்பவரின் தயாரிப்பில் இயக்குனர் பாலா இயக்கும் படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகிறார் நடிகை லாவண்யா.

சுவை அள்ளும் சைவ ஈரல் கிரேவி..,ட்ரை பண்ணி பாருங்க மிச்சமே இருக்காது!!!

தற்போது இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் சொல்லப்படுகிறது. இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் பாண்டியன் ஸ்டோர் முல்லை என்கிற லாவண்யாவுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் படவாய்ப்பு கிடைத்து விட்டதால் சீரியலை விட்டு விலகி விடுவாரோ என்ற சந்தேகமும் ரசிகர்களுக்கு எழுந்துள்ளது. மேலும் அந்த சீரியலில் இருந்து இவரும் விலகினால் கண்டிப்பாக மூட்டையை கட்ட வேண்டி தான் இருக்கும் என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here