கண்ணாம் பூச்சி ரே ரே’…! என்னமா பண்றீங்க…! பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன், ஐஸ்வர்யா, பிரசாந்த் லேட்டஸ்ட் வீடியோ !!!

0

விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர். இந்த சீரியல் நடிகர், நடிகைகள் செய்யும் ரீல்ஸ் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனவை. அந்த வகையில் தற்போது கண்ணன், ஐஸ்வர்யா மற்றும் பிரசாந்த் மூவரும் சேர்ந்து சிவகார்த்திகேயனின் ரெமோ பட வசனத்திற்கு ஒரு ரீல்ஸ் செய்துள்ளார். தற்போது இந்த ரிலீஸ் வீடியோ வைரல் ஆகிவருகிறது.

கூட்டு குடும்ப வாழ்க்கையை மையமாக கொண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். அதில் குடும்பத்தை தாங்கும்  அண்ணன் அண்ணி மற்றும் அவர்களின்  தம்பிகள் என பாச பிணைப்பில் அந்த சீரியலின் கதை நகரும். இந்த சீரியல் கதை நமது குடும்ப கதை போன்று இருப்பதாக நினைக்க தோன்றும் அளவிற்கு அமைந்து இருக்கும். அந்த சீரியலின் தற்போதைய நிலவரமாக அந்த வீட்டின் கடைக்குட்டி கண்ணன் மற்றும் ஐஸ்வர்யாவின் கைக்கூடிய காதல் ஒரு பக்கம், ஐஸ்வர்யா உடனான திருமண கனவில் வலம் வரும் பிரசாந்த் ஒரு பக்கம் என கதை போய்க்கொண்டு இருக்கிறது.

இந்நிலையில், கண்ணன், ஐஸ்வர்யா மற்றும் பிரசாந்த் என மூவரும் இணைந்து நடிகர் சிவகார்த்திகேயனின் படமான ரெமோ படத்தில் சிவகார்த்திகேயன், சதீஷ் மற்றும் மொட்டை ராஜேந்திரன் இணைந்து கலக்கிய ‘ட்வின்க்ளே ட்வின்க்ளே லிட்டில் ஸ்டார்..கண்ணாம் பூச்சி ரே ரே’ என்ற பேமஸ் வசனத்திற்கு மிக அருமையாக ரீல்ஸ் செய்து அந்த வீடியோவை வெளியிட்டு உள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகிவருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by SaravanaVickram (@saravanavickram)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here