நோ மேக்கப் சவாலை நிறைவேற்றிய பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா… வியப்பின் உச்சத்தில் ரசிகர்கள்!!!

0
பாண்டியன் ஸ்டார்ஸ் மீனாவுக்கு நிஜத்தில் இவ்வளவு பெரிய மகன் உள்ளாரா? - அவரே வெளியிட்ட கியூட் புகைப்படம்!

விறுவிறுப்பான கதைக்களத்துடன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். அந்த சீரியலில் இரண்டாவது மருமகளாக மீனா கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருப்பவர் நடிகை ஹேமா. இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் துளியும் மேக்கப் இன்றி ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்.

நடிகை ஹேமா முதலில் சன் டிவி சீரியல்கள் மூலம் தனது சின்னத்திரை பயணத்தை தொடங்கினார். அதன் பின்னர் அடுத்தடுத்து சீரியல்களில் நடித்து உள்ளார். மேலும் இவர் ஆறாது சினம் போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற வெற்றி சீரியலில் மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

அந்த சீரியலில் தொடக்கத்தில் இவர் கூட்டு குடும்ப வீட்டில் சிறு சிறு பிரச்சனைகளுக்கு எல்லாம் சண்டை போட்டு கொண்டு, வீட்டில் இருப்பவர்களை அனுசரித்து போகாமல் அனைவரிடமும் கோபத்தை காட்டி கொண்டிருந்தார். இவ்வாறான இவரின் இந்த செயல்கள் அந்த சீரியல் வில்லி என்ற தோற்றத்தை தந்தது. ஆனால் இவர் கண்ணன் ஐஸ்வர்யா விஷயத்தை பொறுத்த வரையில், கோவத்திலும் சரி பாசத்திலும் சரி மீனாவை மிஞ்ச ஆளே என்பது போல பல்வேறு செயல்களை செய்து வருகிறார்.

இந்நிலையில் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். அதில் சிறிதும் மேக்கப் இன்றி உள்ளார். மேலும் அவரின் இந்த ஒரிஜினல் பியூட்டி புகைப்படம் ரசிகர்களை ஈர்த்து வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here