அட்ரா சக்க.., பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜோடிக்கு விரைவில் திருமணம்.., இப்படி ஒரு ட்விஸ்ட் நாங்க எதிர்பாக்கலையே!!

0
அட்ரா சக்க.., பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜோடிக்கு விரைவில் திருமணம்.., இப்படி ஒரு ட்விஸ்ட் நாங்க எதிர்பாக்கலையே!!
அட்ரா சக்க.., பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜோடிக்கு விரைவில் திருமணம்.., இப்படி ஒரு ட்விஸ்ட் நாங்க எதிர்பாக்கலையே!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முக்கிய பிரபலங்கள் ரீ என்ட்ரி கொடுக்க உள்ளதாகவும், அவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நாளுக்கு நாள் புதுப்புது ட்விஸ்டுகளுடன் நகர்ந்து கொண்டிருக்கிறது. ஜனார்த்தனன் வீட்டை விட்டு மூர்த்தி குடும்பத்தை வெளியேற்றிய நிலையில் அனைவரும் கதிர் வீட்டில் தங்கியுள்ளனர். இந்நிலையில் நேற்றைய எபிசோடில் மூர்த்தி குடும்பத்திற்கு ஏற்பட்ட நிலைமையை பார்த்து மல்லியும், கஸ்தூரியும் நக்கலாக பேசுகின்றனர். இப்படி இருக்கையில் இந்த சீரியலில் புது ட்விஸ்டு ஒன்று அரங்கேற உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதாவது இந்த சீரியலில் மல்லியின் மகன் கேரக்டரில் நடிக்கும் பிரசாத், ஐஸ்வர்யா திருமணத்திற்கு பிறகு சீரியலில் ரீ என்ட்ரி கொடுக்கவில்லை. அதேபோன்று இந்த சீரியலின் தொடக்கத்தில் மீனாவின் தங்கையாக நடித்த ஸ்வேதாவும் மீனா திருமணத்திற்கு பிறகு இப்போது வரை எந்த எபிசோடுகளிலும் காட்டப்படவில்லை. இந் நிலையில் இவர்கள் இருவரும் சீரியலில் ரீ என்ட்ரி கொடுக்க உள்ளதாக சினிமா வட்டாரங்கள் கூறியுள்ளனர்.

இந்த மாதிரி செய்யாதீங்க யாரும்?.., ரசிகர்களுக்கு தளபதி விஜய் கொடுத்த உத்தரவு.., புருஷி ஆனந்த் பரபரப்பு பேட்டி!!

மேலும் இந்த ஸ்வேதாவை தனது மகன் பிரசாத்துக்கு கல்யாணம் செய்து வைக்கும்படி ஜனார்த்தனிடம் மல்லி பொண்ணு கேட்பாராம். இனி வரும் எபிசோடுகளில் இது போன்ற காட்சிகள் தான் ஒளிபரப்பாக உள்ளது. இதை அறிந்த ரசிகர்கள் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்த கல்யாண ஜோடி ரெடி ஆயிடுச்சு என கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் ஜனார்த்தனன் மட்டும் தனது மகளை பிரசாத்துக்கு திருமணம் செய்து கொடுத்தால் மல்லியும், ஜனார்தனனும் சேர்ந்து மூர்த்தி குடும்பத்தை படாதபாடு படுத்துவார்கள் என்பது நிச்சயம். எனவே அடுத்து வரும் எபிசோடுகளில் என்ன நடக்கப்போகிறது என பொறுத்திருந்து பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here