பான் கார்டு வைத்திருப்போரே கவனம்., மறந்தும் இதை செய்யாதீங்க! மீறினால் ரூ10,000 பைன், ஜெயில் கன்பார்ம்!!

0
பான் கார்டு வைத்திருப்போரே கவனம்., மறந்தும் இதை செய்யாதீங்க! மீறினால் ரூ10,000 பைன், ஜெயில் கன்பார்ம்!!
பான் கார்டு வைத்திருப்போரே கவனம்., மறந்தும் இதை செய்யாதீங்க! மீறினால் ரூ10,000 பைன், ஜெயில் கன்பார்ம்!!

வருமான வரித்துறையின் நிரந்தர கணக்கு எண்ணான பான் அட்டை வைத்திருப்பவர், செய்யக்கூடாத சில விஷயங்கள் கீழே தொகுப்பாக தரப்பட்டுள்ளது.

பயனர் கவனத்திற்கு :

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை எப்படி கட்டாயமா அதே போல, 18 வயது நிரம்பிய ஒருவருக்கு பான் கார்டு அவசியம் தேவை. வருமான வரித்துறையின் நிரந்தர கணக்கு எண்ணான இந்த பான் அட்டை அரசின் அனைத்து துறைகளிலும் ஆவணமாக கேட்கப்படுகிறது. 10 இலக்க தனித்துவ நம்பரை கொண்ட இந்த பான் அட்டையில், ஏதேனும் மோசடிகள் நிகழ்ந்தால் சம்பந்தப்பட்ட பயனர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அந்த வகையில், தகுதி வாய்ந்த ஒவ்வொரு குடிமகனும் ஒரே ஒரு பான் அட்டையை மட்டுமே வைத்திருக்க வேண்டும். ஒன்றுக்கும் மேற்பட்ட பான் கார்டு வைத்திருந்தால் அது சட்டப்படி குற்றம். அப்படி ஏதாவது இருந்தால் அதை வருமான வரித் துறையினரிடம் ஒப்படைத்து விட வேண்டும்.

அதேபோல் பான் கார்டு சார்ந்த விவரங்களை, எங்காவது நிரப்ப வேண்டி வந்தால் அதை சரியாக எழுத வேண்டும். மீறி தகவல்களை, தவறாக குறிப்பிடுவது சட்டப்படி குற்றம். இது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டால் ரூபாய் 10,000 அபராதம் அல்லது ஜெயில் தண்டனை விதிக்கப்படும். எனவே பயனர்கள் இதுபோன்ற, செயல்களில் ஈடுபடாமல் தங்கள் பான் அட்டையை சரியாக பயன்படுத்த வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here