பான் – ஆதார் இணைத்துவிட்டீர்களா?? – மக்களுக்கு மத்திய அரசு கொடுத்த அரிய வாய்ப்பு!!

0

பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் 2022 ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் 2009 ஆம் ஆண்டு ஆதார் கார்டு அறிமுகப்படுத்தப்பட்டது. ஆரம்பத்தில் இந்திய குடிமகன்களின் தனி மனித அடையாளமாக இருந்த இது, பின்னர் அனைத்து விஷயங்களுக்கும் கட்டாயம் என்ற முறை உருவாக்கப்பட்டது. அதாவது அரசின் நலத்திட்ட உதவிகளையும் பிற சேவைகளையும் பெற ஆதார் கட்டாயம் என்ற நிலை தற்போது உள்ளது.

 

இந்நிலையில் ஆதார் எண்ணையும்  பான் கார்டுடன் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. இவற்றை இணைப்பதற்கான கடைசி நாள் தற்போது வரை மத்திய அரசால் பல முறை நீட்டிக்கப்பட்டு விட்டது. கடைசியாக மத்திய அரசு, ஆதாரை பான் கார்டுடன் இணைக்க செப்டம்பர் 1 ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என உத்தரவிட்டு இருந்தது.

இந்நிலையில் நடைமுறை சிக்கல்களை கருத்தில் கொண்டு இதன் கடைசி தேதி மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் அடுத்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரை மத்திய அரசால் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here