பொதுவாக சாமானிய மக்கள் முதல் பணக்காரர்கள் வரை அனைவரும் வாங்கி பயன்படுத்தி வரும் அத்தியாவசிய பொருட்களின் சந்தை விலைகள் அவ்வப்போது ஏற்றம் இரக்கம் காட்டி வருவது வழக்கம். அதாவது சந்தையில் இப்பொருட்களின் வரத்தை பொருத்து இதன் விலைகளில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது.
தமிழக விவசாயிகளுக்காக சூப்பர் நியூஸ்., அவசர ஆலோசனை கூட்டத்தில் அதிரடி அறிவிப்பு!!
அந்த வகையில் இன்று விருதுநகர் சந்தையில் சில அத்தியாவசிய பொருட்களின் விலை குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி கடந்த வாரம் ஒரு தின் 1380 விற்கப்பட்ட பாமாயில் இன்று 1360 என குறைந்துள்ளது. மேலும் போன வாரம் 16500 விற்ற 100 கிலோ துவரம் பருப்பு இந்த வாரம் 16000 என குறைந்துள்ளது. இதோடு 100 கிலோ உளுத்தம் பருப்பின் விலை போன வாரம் 13500 க்கு விற்ற நிலையில் இன்று 13000 மாக குறைந்துள்ளது. இதை தொடர்ந்து 100 கிலோ பாசி பருப்பின் விலை 200 குறைந்து 10800 க்கு விற்பனையாகி வருகிறது. இதுதவிர 100 கிலோ பாசி பயிரின் விலை 12000 லிருந்து 11000 மாக குறைந்துள்ளது.