காற்றை சுவாசித்தால் உடனடியாக வியாதி – ஐஐடி மெட்ராஸ் நடத்திய ஆய்வில் வெளியான அவலம்!!

0
காற்றை சுவாசித்தால் உடனடியாக வியாதி - ஐஐடி மெட்ராஸ் நடத்திய ஆய்வில் வெளியான அவலம்!!

அண்மையில் ஐஐடி மெட்ராஸ் முக்கிய ஆய்வு ஒன்றை நடத்தியது. அந்த ஆய்வின் முடிவில் சென்னை பள்ளிக்கரணை மண்டலத்தில் குப்பை கூளங்களுக்கு அருகில் வசிக்கும் மக்கள் நஞ்சை சுவாசித்து நோய்ப்வாய் பட்டு வருகிறார்கள் என தெரியவந்துள்ளது.

ஐஐடி மெட்ராஸ் நடத்திய ஆய்வு:

இந்தியாவில் அதிகமான போக்குவரத்து நெரிசலால் ஏற்படும் மாசு மற்றும் பராமரிக்காத குப்பைகளில் இருந்து வரும் துர்நாற்றம் போன்றவை மக்களிடையே பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் தீராத நோயால் அவதிப்பட்டு துன்புறுகிறார்கள். அண்மையில் ஐஐடி மெட்ராஸ் தமிழகத்தில் முக்கிய ஆய்வு ஒன்றை நடத்தியது. அந்த ஆய்விற்காக 12 மண்டலங்களாக சென்னை பிரித்துக் கொள்ளப்பட்டது. காற்றில் கலந்துள்ள Particulate Matter எந்த அளவில் உள்ளது என்பது குறித்து இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

இந்நிலையில் ஐஐடி மெட்ராஸ் சில முக்கிய இடங்களிலும், கடைகளிலும், தொழிற்சாலைகளிலும், மக்கள் அதிகமாக கூடும் இடத்திலும் மற்றும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படும் இடத்திலும் சோதனையை நடத்தினர். இதனை தொடர்ந்து பள்ளிக்கரணை PM10 அளவு 570.39 ஆகவும், அடையாற்றில் 434.88 ஆகவும், மணலி தொழிற்சாலை பகுதியில் 300.40 ஆகவும் இருப்பது தெரிய வந்தது. இதனால் மக்களுக்கு அதிக அளவில் மாசு ஏற்படும் பகுதியாக பள்ளிக்கரணை மண்டலம் மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மேலும் அங்கு குப்பை நச்சு மிகுந்த வாயுக்கள், நுண் மாசு துகள்கள் ஆகியவை வெளியேறுகின்றன என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு மாநகராட்சி மாசுபாட்டை கட்டுப்படுத்தி நோய் வராமல் இருப்பதற்கு வழிவகுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here