தமிழகத்தில் புகழ்பெற்ற பழனி முருகன் கோவில் கருவறைக்குள் எடுக்கப்பட்ட வீடியோ, புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஆர்.மகாதேவன், ஆதிகேசவலு ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது பாதுகாப்பு தொடர்பான விளக்கங்களை சமர்ப்பிக்க அறநிலையத்துறைக்கு உத்தரவிடப்பட்டு இருந்தது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதையடுத்து பழனி கோவில் சார்பில், “பழனி கோவிலுக்குள் செல்போன், கேமரா போன்றவைகளுக்கு அக்டோபர் 1ஆம் தேதி முதல் தடை விதிக்கப்பட உள்ளது. இதனால் ரோப் கார் மையம், மலை அடிவாரம், தண்ணீர் பந்தல் ஆகிய இடங்களில் மொபைல் போன் சேகரிப்பு மையம் செயல்படும். பின்னர் கோவில் வளாகத்திற்குள் பரிசோதனையாளர், சிசிடிவி உள்ளிட்டவை கொண்டு பாதுகாப்பு பலப்படுத்தப்படும்.” என விளக்கமளித்துள்ளனர். இதனை தொடர்ந்து வழக்கு குறித்த விரிவான உத்தரவு பின்னர் தெரிவிக்கப்படும் எனக்கூறி நீதிபதிகள் விசாரணையை ஒத்தி வைத்தனர்.
பெண் குழந்தைகளுக்கு ரூ.50,000 வழங்கும் திட்டம்…, இன்று தொடங்கி வைத்த புதுச்சேரி முதல்வர்!!