பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை கடுமையாக விமர்சித்த முதல் மனைவி.. இதற்கு பெயர் நாடா?? – பகிரங்கமாக சாடல்!!

0

பாகிஸ்தான் நாட்டின் பிரதமராக உள்ள இம்ரான் கான் அவர்களை அவரது முதல் மனைவி கடுமையாக சாடிய செய்தி அங்கு மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

பயங்கர சாடல்:

நம் அண்டை நாடான பாகிஸ்தானில் இம்ரான் கான் கட்சி தலைமையில் அவரது ஆட்சி நடைபெற்று வருகிறது. அவரது முன்னாள் மனைவி ரேஹாம். கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2015ஆம் ஆண்டு அவரிடமிருந்து விவாகரத்து பெற்று, தற்போது தனது குடும்பத்துடன் இஸ்லாமாபாதில் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம், இரவு உறவினரின் திருமணத்திற்கு காரில் பயணித்துள்ளார்.

திருமணம் முடிந்து வீட்டிற்கு திரும்பும் வழியில், அவரது கார் மீது மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதனை அடுத்து, அவர் வேறு காரில் மாறி ஏறி வீடு திரும்பினார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், இதற்குப் பெயர்தான் இம்ரான் கானின் பாதுகாப்பான பாகிஸ்தானா? இங்கு சட்ட ஒழுங்கு மோசமாக உள்ளது. பேராசைக்காரர்கள் உள்ள இந்த நாட்டிற்கு அனைவரையும் வரவேற்கிறேன் எனவும் கடுமையாக விமர்சித்துள்ளார். இவர் பதவியேற்றதிலிருந்து, இன்று வரை அவரை கடுமையாக விமர்சித்து வரும் ரேஹாமின் இந்த  பேச்சு சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here