பாகிஸ்தான் பெண் உளவாளியிடம் மயங்கிய ரயில்வே தபால் துறை அதிகாரி – ராணுவ ரகசியம் பறி போன சம்பவம்!!

0
பாகிஸ்தான் பெண் உளவாளியிடம் மயங்கிய ரயில்வே தபால் துறை அதிகாரி - ராணுவ ரகசியம் பறி போன சம்பவம்!!
பாகிஸ்தான் பெண் உளவாளியிடம் மயங்கிய ரயில்வே தபால் துறை அதிகாரி - ராணுவ ரகசியம் பறி போன சம்பவம்!!

முகநூலில் மயங்கி நாட்டின் ராணுவ ரகசியங்களை பாகிஸ்தான் பெண் உளவாளியிடம் பறி கொடுத்த இந்திய ரயில்வே தபால் துறை அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

முக்கிய மோசடி:

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் தபால்களை பிரித்து அனுப்பும் பொறுப்பில் பாரத் கோத்ரா என்ற ஒருவர் பணிபுரிந்து வருகிறார். அவருக்கு சமூக வலைத்தளமான முகநூல் மூலம் அழகி ஒருவர் அறிமுகமாகி உள்ளார். பாரத்க்கு அறிமுகமான அந்த பெண் போர்ட் பிளேரில் எம்.பி.பி.எஸ் படிப்பதாக கூறியுள்ளார். இதையடுத்து, அந்த பெண் நேரில் சந்தித்து பழகலாம் என வாட்ஸ்அப் வீடியோ காலில் ஆசைவார்த்தை கூறி அவரை மயக்கி உள்ளார். இவர் பேசிய பேச்சால், அவரை முழுமையாக பாரத் நம்பிவிட்டார்.

பாகிஸ்தான் பெண் உளவாளியிடம் மயங்கிய ரயில்வே தபால் துறை அதிகாரி - ராணுவ ரகசியம் பறி போன சம்பவம்!!
பாகிஸ்தான் பெண் உளவாளியிடம் மயங்கிய ரயில்வே தபால் துறை அதிகாரி – ராணுவ ரகசியம் பறி போன சம்பவம்!!

இதில், மயங்கிய அந்த அதிகாரி, தபாலில் வந்த ராணுவ தகவல் தொடர்பு ஆவணங்களை படம் எடுத்து வாட்ஸ்ஆப்பில் அவருக்கு அனுப்பியுள்ளார். ராணுவத்தில் பணிபுரியும் தனது உறவினருக்கு இந்த தகவல்கள் தேவைப்படுவதாக கூறி இந்த தகவல்களைத் அந்த பெண் திருடியுள்ளார். அதற்கு பிறகு அந்த பெண்ணை பாரத் தொடர்பு கொள்ள முடியாமல் போகவே அப்போது தான் அவருக்கு தான் ஏமாந்தது தெரிய வந்தது.

பாகிஸ்தான் பெண் உளவாளியிடம் மயங்கிய ரயில்வே தபால் துறை அதிகாரி - ராணுவ ரகசியம் பறி போன சம்பவம்!!
பாகிஸ்தான் பெண் உளவாளியிடம் மயங்கிய ரயில்வே தபால் துறை அதிகாரி – ராணுவ ரகசியம் பறி போன சம்பவம்!!

இதனை அடுத்து, ராணுவ புலனாய்வு பிரிவினரும், ராஜஸ்தான் மாநில உளவுப் பிரிவினரும் இணைந்து பாரத் கோத்ராவை கைது செய்தனர். விசாரணைக்கு பிறகே பாகிஸ்தான் உளவாளியிடம் ஏமாந்தது அந்த நபருக்கு தெரிய வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், ராணுவத்தின் திட்டங்களை எதிரிக்கு கொடுத்த குற்றத்திற்காக அதிகாரப்பூர்வ ரகசியங்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பாரத் கைது செய்யப்பட்டுள்ளார். இவரது இந்த செயல் சமூக வலைதளங்களில் பெண்களிடம் மயங்கி பேசுவோர்க்கு ஒரு பாடமாக அமைந்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here