பாகிஸ்தான் பிரதமருக்கு கொரோனா தொற்று உறுதி – சீன தடுப்பூசியின் பின்விளைவா??

0

பாகிஸ்தான் பிரதமரான இம்ரான் கான் சில தினங்களுக்கு முன்பு சீன நாட்டின் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டும் அவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா:

கடந்த ஆண்டு சீனாவில் இருந்து உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி மக்களை துன்புறுத்தி வருகிறது. சுமார் 1 ஆண்டு காலமாகியும் இன்னும் எந்த நாடும் கொரோனாவில் இருந்து முழுவதுமாக மீளவில்லை. இந்நிலையில் அனைத்து உலக நாடுகளும் தற்போது கொரோனாவிற்கான தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்காக மக்களுக்கு வழங்கி வருகின்றனர். ஆனாலும் கூட கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. மேலும் இந்த கொரோனா அரசியல் தலைவர் பிரமுகர்கள் என அனைவரையும் தாக்கி வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் தற்போது பாகிஸ்தான் பிரதமரான இம்ரான் கானுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவர் தற்போது அவரது வீட்டிலே தன்னை தனிமைப்படுத்தி கொண்டார் என்று அவரது சிறப்பு உதவியாளர் அறிவித்துள்ளார். ஆனால் இதில் ஓர் சர்ச்சையும் மறைந்துள்ளது. அது என்னவென்றால் இவர் இரண்டு தினங்களுக்கு முன்பு தான் சீன நாட்டின் தடுப்பூசியான சைனோபார்மை எடுத்துள்ளார்.

9, 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு இனி ஆன்லைன் கிளாஸ் – தலைமை செயலாளர் அதிரடி!!

தற்போது இதன் காரணமாக தான் இவருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளதா என்று சதேகிகப்படுகிறது. ஏனெனில் இந்த உலகிற்கே சீன நாடு தான் கொரோனாவை பரப்பி விட்டது என்று அனைவரும் கூறினர். தற்போது இந்த நிகழ்வை பார்க்கும் பொழுது அனைவரும் அந்த நியாபகம் தான் வரும். இவருக்கு ஏற்கனவே கொரோனா தொற்று ஏற்பட்டு அதன்பின்பு இந்த தடுப்பூசியை போட்டுள்ளதால் இந்த நிலையா? அல்லது சீன நாட்டின் கொரோனா தடுப்பூசியின் பின்விளைவா?? என்பது விரைவில் தெரியவரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here