ஆத்தி.. என்ன கொலை வெறி.. ஸ்டேடியத்தில் எதிரணி வீரரை பேட்டால் துவம்சம் செய்ய துணிந்த பாக்.வீரர்!

0
ஆத்தி.. என்ன கொலை வெறி.. ஸ்டேடியத்தில் எதிரணி வீரரை பேட்டால் துவம்சம் செய்ய துணிந்த பாக்.வீரர்!
ஆத்தி.. என்ன கொலை வெறி.. ஸ்டேடியத்தில் எதிரணி வீரரை பேட்டால் துவம்சம் செய்ய துணிந்த பாக்.வீரர்!

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற போட்டியின் போது வீரர்களிடையே ஏற்பட்ட மோதலால் பாகிஸ்தான் வீரர் ஆசிஃப் அலி, எதிரணி வீரரை தாக்க வந்ததால் மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

தடை விதிக்குமா ஐசிசி!

ஆசிய கோப்பை தொடர் விறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கான இறுதிப் போட்டியில் இலங்கை அணி நுழைந்துள்ள நிலையில் அடுத்த இடத்தில் யார் நுழை போகிறார்கள் என ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் இருந்தனர். இந்நிலையில் நேற்று பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 129 ரன்கள் எடுத்து எதிரணிக்கு இலக்கு நிர்ணயித்தனர். இதனை தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி 19.2 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 131 ரன்கள் குறித்து வெற்றி பெற்றது.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டிக்குள் அடியெடுத்து வைத்துள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் அணிக்கு மிகப்பெரிய சிக்கல் நேர்ந்துள்ளது. அதாவது பாகிஸ்தான் அணி வீரர் பேட்டிங் செய்து கொண்டிருக்கும் போது கடைசி ஓவரில் வெற்றிக்கு பதினோரு ரன்கள் தேவைப்பட்டது. அப்போது பேட்டிங் செய்து கொண்டிருந்த ஆசிஃப் அலி தொடர்ந்து இரண்டு சிக்சர்களை விளாசினார். இதன் மூலம் பாக் அணி வெற்றியை நோக்கி சென்று கொண்டிருந்தபோது அடுத்த பந்தையும் இதே போன்று எதிர் கொள்ள, ஆனால் எதிர் அணி வீரர் ஃபரித் வீசிய ஓவரில் ஆட்டம் இழந்தார். இதனால் ஆப்கானிஸ்தான் வீரர் மகிழ்ச்சியில் உற்சாகமாக துள்ளி குதித்தார்.

இதனால் கோபமடைந்த ஆசிஃப் அலி தன்னுடைய பேட்டை எடுத்து அடிக்க முயன்றார். இதற்கு ஆப்கானிஸ்தான் வீரரும் அவருக்கு சரிசமமாக மல்லுக்கட்ட களத்தில் நின்றனர். இதனால் பிரச்சனை முத்திப் போகும் என பயந்த சக வீரர்கள் அனைவரும் இவர்கள் இருவரையும் தடுத்தனர். இந்நிலையில் பாகிஸ்தான் வீரர் இப்படி செய்ததற்கு ஆப்கானிஸ்தான் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் கடும் குற்றச்சாட்டுகளை வைத்து வருகின்றனர். இந்நிலையில் இவர் மைதானத்தில் செய்த இந்த செயலுக்கு தற்போது ICC நடவடிக்கை எடுத்து வருவதாக கூறியுள்ளனர். இதனால் பாக் வீரர் ஆசிஃப் அலி அடுத்த போட்டியில் களமிறங்க மாட்டார் என்ற நிலை ரசிகர்கள் மத்தியில் நிலவு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here