
கடந்த சில வருடங்களாக பாகிஸ்தான் நாட்டின் பொருளாதார வர்த்தகம் கவலைக்கிடமாக இருந்து வருவதால், அந்நாட்டு மக்கள் பலரும் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இந்த சூழலுக்கு முன்னாள் பிரதமர் இம்ரான் பொறுப்பில் இருந்த போது முறைகேடாக செலவு செய்தது தான் காரணம் என அவரை கைது செய்து சிறையிலடைத்தனர். இதைத்தொடர்ந்து பிரதமராக பொறுப்பேற்ற ஷெபாஸ் ஷெரீப், நாட்டின் நாடாளுமன்றத்தை கலைத்து விட்டார்.
Enewz Tamil WhatsApp Channel
அடுத்த 90 நாட்களில் தேர்தல் நடத்தப்பட வேண்டிய விதி இருக்கும் நிலையில், இதுவரை தேர்தல் அறிவிப்பை அந்நாட்டு தேர்தல் ஆணையம் வெளியிடவில்லை. இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று (நவ.2) விசாரணைக்கு வரவே, 2024 பிப்ரவரி 11ஆம் தேதி பாகிஸ்தானில் பொதுத் தேர்தல் நடத்தப்படும் என விளக்கமளித்துள்ளனர்.
கல்லறைத் தினம்: விச்சித்திர முறையில் கிறிஸ்தவர்கள் வழிபாடு…, முழு விவரம் உள்ளே!!