பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது துப்பாக்கி சூடு? பேரணியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

0

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் அரசுக்கு எதிராக நடத்திய பேரணியில், துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதால், இம்ரான் கான் காயமாகி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

முன்னாள் பிரதமர் காயம்:

பாகிஸ்தானில் தற்போது பிரதமர் செபாக் ஷெரீப் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இதற்கு முன் பாகிஸ்தானின் பிரதமராக இருந்த இம்ரான் கான், நாடாளுமன்றத்தில் தன் பலத்தை நிரூபிக்க முடியாததால் தன் தலைமையிலான ஆட்சியை இழந்தார். அதன் பிறகு புதிய பிரதமர் ஆட்சியில் தற்போது, பாகிஸ்தான் நிர்வாகம் வழிநடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அரசுக்கு எதிராக முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தலைமையில் வாஸிராபாத் நகரில் பேரணி நடத்தப்பட்டது. இந்தப் பேரணியின் போது, திடீரென நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவத்தால் அங்கிருந்த பலருக்கும் காயம் ஏற்பட்டது. இதுபோக, முன்னாள் பிரதமர் இம்ரான் கான் காலில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

இதையடுத்து அவர் அவசரமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாக, பாகிஸ்தான் அரசியல் வட்டாரத்தில் இருந்து தகவல் கசிந்துள்ளது. இது போக துப்பாக்கி சூட்டில் பலரும் காயம் அடைந்து இருப்பதாக, காவல்துறையின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here