என்னப்பா.., இது விளையாட சொன்ன காமெடி பண்றீங்களே.., அட்டகாசம்  செய்த பாகிஸ்தான் வீரர்கள்.., இதுனால தான் தோல்வியா??

0

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் பாகிஸ்தான் வீரர்கள் பீல்டிங் ரசிகர்களுக்கு மிகுந்த சிரிப்பை ஏற்படுத்தியதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

கடுப்பான பாக் ரசிகர்கள்

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இறுதி ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில் இலங்கை அணி வீரர்கள் பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே அசத்தி வெற்றி பெற்று ஆறாவது முறையாக கோப்பையை தட்டி சென்றனர். இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் மோசமான தோல்விக்கு பந்துவீச்சாளர்கள் தான் காரணம் என பாகிஸ்தான் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர். அதாவது ஒரு போட்டியில் வெற்றி பெறுவதற்கு பேட்ஸ்மேன்களை விட பவுலர்கள் தான் முக்கிய காரணமாக இருப்பார்கள்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அதாவது எதிரணி வீரர்கள் பேட்டிங் செய்யும் போது கிடைக்கும் ஒவ்வொரு கேட்ச்களையும் பிடிப்பதன் மூலம் பல வெற்றிகள் கிடைக்கும். ஆனால் நேற்று நடந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் வீரர்கள் அருமையாக கிடைத்த அனைத்து கேட்ச் வாய்ப்புகளையும் தவறவிட்டனர். அதாவது இலங்கை அணி வீரர் ராஜபக்சா தனி ஒரு ஆளாக நின்று அதிக ரன்கள் குவித்தார். அப்போது அவர் அடித்த ஒரு பந்து பாகிஸ்தான் வீரர் கையில் கேட்ச் ஆக சென்றது.

ஆனால் அதை அவர் அசால்டாக தவறவிட்டதால் நேற்றைய போட்டியில் பாகிஸ்தானுக்கு கடும் தோல்வி நேர்ந்தது. இதனால் பாகிஸ்தான் வீரர்களை ரசிகர்கள் அனைவரும் கடுமையான விமர்சனம் செய்து வருகின்றனர். மேலும் இதே போன்று கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை, 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பை ஆகிய போட்டிகளில் கேட்சை தவறவிட்டதன் மூலம் தோல்வி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பாகிஸ்தான் ரசிகர்கள் கடுப்பாக, மற்றவர்கள் விழுந்து விழுந்து சிரித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here