இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆசிய கோப்பை 2023 போட்டிகளில் விளையாடி வருகிறது. அந்த வகையில், நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி பாகிஸ்தான் அணியுடன் மோதியது. இலங்கையில் உள்ள பல்லேகலே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணி 50 ஓவர் முடிவில் 266 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்யத் துவங்கும் முன் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டு, டிரா செய்யப்பட்டது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்த ஆட்டத்தில் ரோஹித் ஷர்மா (14), விராட் கோலி (4) என முன்னணி வீரர்களை சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இப்படி இருக்க போட்டிக்குப் பின் இந்திய அணியின் பேட்டிங் குறித்து பேசிய பாகிஸ்தான் அணியின் பவுலர் ஷாஹின் அப்ரிடி, ‘விராட் கோலி இந்திய அணியின் முதுகெலும்பு. கோலியின் விக்கெட் எங்களுக்கு முக்கியமானதாக இருந்தது’ என்று கூறியுள்ளார்.