ஆபத்தான அணு ஆயுதங்களை தயாரிக்க பாகிஸ்தானுடன் சீனா ரகசிய ஒப்பந்தம்..!

0

இந்தியா மற்றும் போட்டி நாடுகளுக்கு எதிரான தாக்குதலுக்காக ஆபத்தான உயிரியல் ஆயுதங்களை தயாரிக்க பாகிஸ்தானும் சீனாவும் இரகசிய மூன்று ஆண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

பாகிஸ்தானுடன் ஒப்பந்தம்..!

உகான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜியிலிருந்து கொரோனா நோய் தோன்றியிருக்கலாம் என்றும் கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கையாண்ட விதம் குறித்து சீனா விமர்சிக்கப்பட்டு வருகிறது. சமீபத்திய ஆண்டுகளில் உயிரியல் போரின் அச்சுறுத்தல் கணிசமாக வளர்ந்துள்ளது, டி.என்.ஏ ஆராய்ச்சியில் சீனா பெரிதும் ஈடுபட்டுள்ளது, இது ஒரு உயிரியல் ஆயுதத்தை குறிவைக்க அல்லது குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு எதிராக பயன்படுத்துவதற்காக இருக்கக்கூடும் என கவலைகொள்ள செய்து உள்ளது.

உகான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி ஆய்வகம் பாகிஸ்தான் இராணுவத்தின் பாதுகாப்பு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைப்பு (டெஸ்டோ) உடன் இரகசிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. வளர்ந்து வரும் தொற்று நோய்கள் பற்றிய ஆராய்ச்சிக்கு ஒத்துழைக்க மற்றும் பரவும் நோய்களின் உயிரியல் கட்டுப்பாடு குறித்த முன்கூட்டிய ஆய்வுகளுக்காக இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

வாரத்தில் இரு தினங்கள் முழு பொது முடக்கம் – மேற்கு வங்க அரசு திட்டம்..!!

டெஸ்டோ ஒரு இரகசிய உயிரியல் ஆயுத திட்டத்தின் கீழ் ஆந்த்ராக்ஸ் தொடர்பான பல்வேறு இரட்டை பயன்பாட்டு ஆராய்ச்சி திட்டங்களில் ஈடுபட்டுள்ளது. உகான் ஆய்வகம் பாகிஸ்தானுக்கு உதிரிபாகங்களை வழங்கியுள்ளது. பாகிஸ்தான் தனது சொந்த வைரஸ் சேகரிப்பு தரவுத்தளத்தை உருவாக்க உதவுவதற்காக பாகிஸ்தானிய விஞ்ஞானிகளுக்கு நோய்க்கிருமிகள் மற்றும் உயிர் தகவல்தொடர்புகளை கையாள்வது பற்றிய விரிவான பயிற்சியையும் அளித்துள்ளது.

உளவுத்துறை ஆதாரத்தின்படி இந்த பயிற்சி பாகிஸ்தானுக்கு வைரஸ்களின் மரபணு அடையாளம் காணல் ஆபத்தான நுண்ணுயிரிகளுக்கான அணுகல் மற்றும் ஆராய்ச்சி மற்றும் தொற்று நோய்களுக்கான மரபணு கருவிகளைப் பயன்படுத்துவதற்கான திறனை மேம்படுத்த உதவும். இந்த ரகசிய திட்டம் பாகிஸ்தானில் உள்ள சிவில் பல்கலைக்கழகங்கள் அல்லது அரசாங்க சுகாதாரத் துறைகளின் மேற்பார்வையிலிருந்து பிரிக்கபட்டு உள்ளது. இரகசிய சீனா-பாக்கிஸ்தான் திட்டம் பேசிலஸ் துரிங்ஜென்சிஸ் பிரிக்க வெற்றிகரமான மண் மாதிரி சோதனைகளை நடத்தியுள்ளது. இது பேசிலஸ் ஆந்த்ராசிஸ் அல்லது ஆந்த்ராக்ஸுடன் குறிப்பிடத்தக்க ஒற்றுமையை கொண்டுள்ளது.

ரத்தக்கசிவு காய்ச்சல்..!

சீனா-பாகிஸ்தான் உயிரியல் திட்டம் ஏற்கனவே கிரிமியன்-காங்கோ ரத்தக்கசிவு காய்ச்சல் வைரஸ் (சி.சி.எச்.எஃப்.வி) மீது சோதனைகளை மேற்கொண்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன. உயிரி பாதுகாப்பு நிலை -4 நோய்களைக் கையாள வசதியற்ற ஆய்வகங்களில் ரத்தக்கசிவு காய்ச்சல் குறித்து பாகிஸ்தான் சோதனைகளை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. உகான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி சீனாவின் தெற்கு யுன்னான் மாகாணத்தில் குன்மிங்கில் மருத்துவ உயிரியல் நிறுவனத்தையும் நிறுவியுள்ளது

இந்தியாவுக்கு எதிராக..!

இந்த திட்டத்தில் சீனாவின் ஈடுபாட்டை பார்க்கும் போது இந்தியா மற்றும் முக்கிய மேற்கத்திய உளவு அமைப்புகள் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானை ஈடுபடுத்துவதற்கான சீனாவின் முக்கிய திட்டமாக இருக்கலாம். இந்த திட்டத்தில் சீனாவின் ஆர்வம் முக்கியமாக இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானை ஈடுபடுத்துவதற்கும், வெளிநாட்டு மண்ணில் ஆபத்தான சோதனைகளை நடத்துவதற்கும், சீனாவின் நிலத்தையும் அதன் மக்களையும் ஆபத்துக்கு உட்படுத்தாமல் பாகிஸ்தான் மண்ணில் சோதனை நடத்த உந்தப்படுகிறது.

India-china
India-china

சீனா அபாயகரமான உயிரி வேதியியல் ஆராய்ச்சிக்கான ஒரு இடமாக பாகிஸ்தானை தேர்ந்து எடுத்தது நடவடிக்கையின் ஒரு பகுதியாகும் அதே சமயம் இதுபோன்ற செயல்களுக்கு தனது சொந்த நிலப்பகுதியைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here