ஒரே நேரத்தில் 12 கிரிக்கெட் வீரர்களுக்கு உடல் நிலை பாதிப்பு…, பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் நடைபெறுமா??

0
ஒரே நேரத்தில் 12 கிரிக்கெட் வீரர்களுக்கு உடல் நிலை பாதிப்பு..., பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் நடைபெறுமா??
ஒரே நேரத்தில் 12 கிரிக்கெட் வீரர்களுக்கு உடல் நிலை பாதிப்பு..., பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் நடைபெறுமா??

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் தொடருக்கு முன் இங்கிலாந்து வீரர்களுக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

PAK vs ENG:

டி20 உலக கோப்பையின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. இதன் பிறகு, இந்த இரு அணிகளும் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட திட்டமிட்டுள்ளனர். இந்த தொடரின் முதல் போட்டியானது, டிசம்பர் 1ம் (நாளை) தேதி முதல் பாகிஸ்தானின் நடைபெற இருக்கிறது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்த தொடருக்காக, பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் நாளை தொடங்க உள்ள இந்த தொடருக்கு முன்பாக, அதிர்ச்சிக்குரிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது, இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் உட்பட 12 வீரர்களுக்கு உடல் நிலை சரியில்லை என்று கிரிக்கெட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகின்றன.

ஐபிஎல் குறித்து வெளியான முக்கிய அப்டேட்…, மினி ஏலத்தை இவர்தான் நடத்தப் போராரா?? முழு விவரம் உள்ளே!!

கொரோனா தொற்று அல்ல, ஆனால், ஒரு வித வைரஸ் பாதிப்பாக இருக்கும் என அச்சத்தில் உள்ளனர். இதனால், இன்றைய பயிற்சியை தடை செய்து விட்டு, ஓய்வில் இருக்கும்மாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. இதன் விளைவால், நாளை நடைபெற இருக்கும், டெஸ்ட் தொடரின் முதல் நாள் ஆட்டத்திற்கு பாதிப்பு ஏற்பட கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here