மீண்டும் வருகிறது ‘பையா’?…,ஆர்யாவுக்கு ஜோடியாகும் ஜான்வி? இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே…,

0
மீண்டும் வருகிறது 'பையா'?...,ஆர்யாவுக்கு ஜோடியாகும் ஜான்வி? இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே...,
மீண்டும் வருகிறது 'பையா'?...,ஆர்யாவுக்கு ஜோடியாகும் ஜான்வி? இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே...,

நடிகர் ஆர்யா மற்றும் பாலிவுட் நடிகை ஜான்வி நடிப்பில் ‘பையா 2’ திரைப்படம் தயாரிக்கப்பட இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

பையா திரைப்படம்

கடந்த 2010 ஆம் ஆண்டு நடிகர் கார்த்தி மற்றும் நடிகை தமன்னா நடிப்பில் வெளியான திரைப்படம் ‘பையா’. வித்தியாசமான காதல் காட்சிகளுடன் அமைக்கப்பட்ட இந்த திரைப்படம் இளைஞர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்திருந்தது. அதே போல இந்த திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் அடித்தது. இதை தொடர்ந்து ‘பையா’ திரைப்படத்தின் 2 ஆம் பாகம் எடுக்கப்படுமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

ஆனால், இது குறித்த அப்டேட் எதுவும் கொடுக்கப்படவில்லை. இந்த நிலையில், ‘பையா’ திரைப்படத்தின் 2 ஆம் பாகம் குறித்த சில தகவல்கள் இணையதளத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது. அதாவது, ‘பையா 2’ திரைப்படத்தில் நடிகர் ஆர்யா மற்றும் அவருக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நடிக்க இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

இப்படி ஒரு அன்ப உங்ககிட்ட எதிர்பார்க்கல.., பதான் படம் வெற்றிக்கு தீபிகா படுகோனே நெகிழ்ச்சி!!

இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்ற விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை. இருப்பினும், இந்த தகவல் உண்மைக இருந்தால் ஜான்வி கபூர் நடிக்கும் முதல் தமிழ் திரைப்படமாக இது இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here