படையப்பா படத்துக்கு 2 கிளைமாக்ஸ்., கறாராக சொல்லிய ரஜினி., மிரண்டு போன கே.எஸ்.ரவிக்குமார்!!

0
படையப்பா படத்துக்கு 2 கிளைமாக்ஸ்., கறாராக சொல்லிய ரஜினி., மிரண்டு போன கே.எஸ்.ரவிக்குமார்!!
படையப்பா படத்துக்கு 2 கிளைமாக்ஸ்., கறாராக சொல்லிய ரஜினி., மிரண்டு போன கே.எஸ்.ரவிக்குமார்!!

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில், கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி, 1999 வெளியான படையப்பா திரைப்படம் குறித்த, முக்கிய தகவல் தற்போது வெளியாகி வைரல் ஆகியுள்ளது.

வைரல் அப்டேட்:

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகிக் கடந்த 1999 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் படையப்பா. இந்தப் படத்தில் ஹீரோவுக்கு இணையாக, வில்லி நீலாம்பரி கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டது. இந்தப் படத்தை தற்போது தொலைக்காட்சியில் போட்டால் கூட, அந்த சேனலுக்கு டிஆர்பி எகிறிவிடும்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அந்த வகையில் இந்த படத்தின், கிளைமாக்ஸ் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது படையப்பா மேல் கோபத்துடன் வரும் நீலாம்பரி, அவர் காப்பாற்றிய உயிர் தனக்கு தேவையில்லை எனக் கூறி தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக் கொள்வார். இதுதான் ரசிகர்களுக்கு காட்டப்பட்ட கிளைமாக்ஸ். ஆனால், ரஜினி சொல்வதைக் கேட்டு நீலாம்பரி திருந்தி வாழ்வது போல், கே. ரவிக்குமார் ஒரு கிளைமாக்ஸ் சீனை எடுத்திருந்தாராம்.

என்ன நிதி.,சிம்புவோட கூட நீங்க இப்படி இல்ல.,உதயநிதியோட இப்படியா ? வைரலாகும் போட்டோ!!

அதை காட்டி ரஜினியிடம் கேட்ட போது, கண்டிப்பாக இதை வைக்கக்கூடாது, வேண்டாம் என மறுத்து விட்டாராம். ஆனால் கே எஸ் ரவிக்குமார், இந்த கிளைமாக்ஸ் வரவில்லை என்றால் , நீலாம்பரி கேரக்டர் தூக்கி வைத்து பேசப்படும். உங்க இமேஜ் குறைந்துவிடும் எனக் கூறியிருக்கிறார். ஆனால், ரஜினி வேண்டாவே வேண்டாம் என கறாராக சொல்லிவிட்டாராம். தற்போது இந்த செய்தி இணையத்தில் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here