
தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் பல ஹிட் படங்களை கொடுத்து இருந்தாலும், அவரது கெரியரில் மாஸ்டர் பீஸ்களில் ஒன்றாக இருந்து வரும் திரைப்படம் தான் படையப்பா. இப்படத்தில் “சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறு” பாடலில் இடம்பெற்ற ” நான் மீசை வைத்த குழந்தையப்பா” என்ற வரி வரும் போது ரஜினி குழந்தை வடிவத்தில் மாறுவார்.
அந்த குழந்தை தற்போது பிரபல சீரியல் நடிகை என்றால் யாராலும் நம்ப முடிகிறதா?., அட ஆமாங்க அந்த குழந்தை வேற யாரும் இல்லை, பிரபல சீரியலான இலக்கியாவில் கதாநாயகியாக வலம் வரும் ஹேமா பிந்து தான் அது. இதை கேட்ட ரசிகர்கள் அந்த குழந்தை இவங்களா? என்று வாயடைத்து போய் உள்ளனர்.