கடைசி நேரத்தில் வந்தடைந்த ஆக்சிஜன், சினிமாவை மிஞ்சிய பரபரப்பு நிமிடங்கள்..! எம்.பி க்கு குவியும் பாராட்டுக்கள்..!

0
கடைசி நேரத்தில் வந்தடைந்த ஆக்சிஜன், சினிமாவை மிஞ்சிய பரபரப்பு நிமிடங்கள்..! எம்.பி க்கு குவியும் பாராட்டுக்கள்..!
கடைசி நேரத்தில் வந்தடைந்த ஆக்சிஜன், சினிமாவை மிஞ்சிய பரபரப்பு நிமிடங்கள்..! எம்.பி க்கு குவியும் பாராட்டுக்கள்..!

மதுரையில் நேற்று சரியான நேரத்தில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் மருத்துவமனைகளை வந்தடையாததால் எம்.பி சு.வெங்கடேசன், அமைச்சர்கள் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்,பி. மூர்த்தி ஆகியோர் களத்தில் இறங்கி ஆக்சிஜன் சிலிண்டர்களை மருத்துவமனையில் சேர்த்த சம்பவம் பலரது பாராட்டுகளையும் பெற்ற வண்ணம் உள்ளது.

832 பச்சிளம் குழந்தைகளை காவு வாங்கிய கொரோனா – பிரேசிலில் அரங்கேறிய சோகம்!!

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலையின் தாக்கம் கடுமையான சூழலை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பை காட்டும் முக்கியமான அறிகுறியாக மூச்சுத்திணறல் கருதப்படுகிறது. தமிழக அரசு, தனியார் மற்றும் அரசு மருத்துவ மனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.தமிழக அரசின் நடவடிக்கையால் தற்போது மாநிலத்திற்குள்ளேயே பல சிப்காட் மூலமாகவும், மூடப்பட்ட தொழிற்சாலைகள் மூலமாகவும் ஆக்சிஜன் தயாரிக்கப்பட்டு வருகிறது. தற்போதைய நிலவரப்படி தினசரி 420 மெட்ரிக் டன் வரை ஆக்சிஜன் தயாரிக்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. ஆனால் அவ்வாறு தயாரித்த ஆக்சிஜனை மருத்துவமனைகளுக்கு எடுத்து செல்வதில் போக்குவரத்து சிக்கல் உள்ளிட்ட பல சிரமங்கள் உள்ளன.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

இது போன்ற சூழலில் நேற்று மதுரைக்கு ஆக்சிஜன் இரவு 11 மணிக்கு வந்தடைந்திருக்க வேண்டும். ஆனால் போக்குவரத்து காரணங்களால் வரவேண்டிய ஆக்சிஜன் சிலிண்டர்கள் உரிய நேரத்திற்கு வரவில்லை. இதனால் மதுரையில் பதற்றம் ஏற்பட்டது. இதை அறிந்த எம்.பி சு.வெங்கடேசன், அமைச்சர்கள் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்,பி. மூர்த்தி விரைவாக களத்திற்கு சென்று ஆக்சிஜன் கிடைக்க ஏற்பாடுகளை செய்துள்ளனர்.இதனால் மதுரையில் இரவு 1.15 மணிக்கு ஆக்சிஜன் வந்தடைந்தது. இதை எம்.பி சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதை பார்த்த இணைய வாசிகள் துரிதமாக செயல்பட்டு பலர் உயிரை காப்பாற்றியதற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here