இறுதி சுற்றை நெருங்கிய பிபி ஜோடிகள் – ஸ்பெஷல் கெஸ்ட் இவர் தானாம்! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!

0

விஜய் டிவியில் தற்போது பிபி ஜோடிகள் நிகழ்ச்சி பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் தற்போது இறுதி சுற்றை நெருங்கிய நிலையில் முக்கிய பிரபலம் ஒருவர் கலந்து கொண்டுள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிபி ஜோடிகள்

பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்த நிலையில் அதன் பிறகு புதுமையாக அந்த போட்டியாளர்களை வைத்து டான்ஸ் நிகழ்ச்சி ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி ஆரம்பத்தில் இருந்தே நல்ல வரவேற்பை பெற்றது. போட்டியாளர்களும் தங்களது திறமைகளை காட்ட ஆரம்பித்தனர்.

அதிலும் கேபி, ஆஜித், அனிதா- ஷாரிக் சொல்லவே வேண்டாம் தூள் கிளப்பி விட்டனர். வனிதாவும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருக்க ரம்யா கிருஷ்ணன் இடையே ஏற்பட்ட பிரச்சனையால் அந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். இதனால் இந்த நிகழ்ச்சிக்கு டிஆர்பி ரேட்டிங் அதிகரித்தது.

இப்பொழுது இந்த நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் யார் வெற்றி பெற போவது என்ற ஆவல் அனைவருக்குமே உள்ளது. இந்நிலையில் முக்கிய பிரபலம் ஒருவர் இதில் பங்கேற்றுள்ளார்.

அதுவும் மக்கள் மனதை கொள்ளைகொண்ட பிக் பாஸ் பிரபலம் ஓவியா இதில் ஸ்பெஷல் கெஸ்ட்டாக கலந்துகொண்டுள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இப்பொழுது தான் ஓவியா விஜய் டிவியில் கால் பதித்துள்ளார். இதனால் அந்த நிகழ்ச்சி பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்`

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here