2011 ஏப்ரல் 2ல்.. 28 ஆண்டுகளுக்குப் பிறகு உலக கோப்பையை இந்தியா வென்ற தினம்!!

0
2011 ஏப்ரல் 2ல்.. 28 ஆண்டுகளுக்குப் பிறகு உலக கோப்பையை இந்தியா வென்ற தினம்!!
13 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் உள்ள வான்கடே மைதானத்தில் இந்தியா , இலங்கை அணிகள் மோதிய 50 ஓவர் உலக கோப்பை தொடரின் இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 274 ரன்கள் குவித்தது. அதன்பிறகு விளையாடிய இந்திய அணி 277 ரன்கள் அடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் தோனியின் தலைமையில் 28 ஆண்டுகளுக்குப் பிறகு உலக கோப்பையை இந்தியா வென்றது.  இறுதிப் போட்டியில் கேப்டன் தோனி 91*(79) ரன்கள் அடித்து ஆட்ட நாயகன் விருதை வென்றார். இந்த ஆட்டத்தில் ஜாகீர், யுவராஜ் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். தற்போது இந்திய அணி உலக கோப்பையை வென்ற இத்தினத்தை ரசிகர்கள் நினைவு கூர்ந்து மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here