தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2023-24: இந்த நலத்திட்டத்திற்கான முக்கிய தகவல் வெளியிடப்படுமா? வலுக்கும் எதிர்பார்ப்பு!!!

0
தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2023-24: இந்த நலத்திட்டத்திற்கான முக்கிய தகவல் வெளியிடப்படுமா? வலுக்கும் எதிர்பார்ப்பு!!!
தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2023-24: இந்த நலத்திட்டத்திற்கான முக்கிய தகவல் வெளியிடப்படுமா? வலுக்கும் எதிர்பார்ப்பு!!!

தமிழ்நாட்டில் 2023-24ம் நிதியாண்டுக்கான பொது பட்ஜெட்டை நேற்று நிதியமைச்சர் P.T.R.பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். மேலும் இந்த சட்டசபை கூட்டத்தொடர் வருகிற ஏப்ரல் 21ம் தேதி வரை நடைபெற உள்ளது என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து விவசாயிகளின் வளர்ச்சி நலத்திட்டத்திற்கான வேளாண் பட்ஜெட்டை M.R.K.பன்னீர்செல்வம் இன்று (மார்ச் 21) காலை 10 மணிக்கு தாக்கல் செய்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

தற்போது பெரும்பாலான விவசாயிகளின் எதிர்பார்ப்பாக இருப்பது அங்கக வேளாண்மை கொள்கை குறித்து தான். கடந்த 14ம் தேதி இத்திட்டத்தை குறித்த தகவலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு இருந்தார். அதன்படி கலப்படங்கள் நிறைந்த உரம், மருந்து போன்றவைகளால் உடல்நலமும் மண்வளமும் பாதிக்கப்பட்டு வருகிறது. இதை சீர்திருத்தவே இயற்கை வேளாண்மை கொள்கையை முதல்வர் அறிமுகப்படுத்தியுள்ளார்.

காலிறுதி சுற்றுக்கு முன்னேறிய லோவ்லினா & சாக்ஷி…, உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் அசத்தல் வெற்றி!!

மேலும் இதற்கான தயாரிப்பிற்காகவும் விழிப்புணர்வுக்காகவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் அறிவிக்கப்பட்ட சில நாட்களிலே விவசாயிகள் முதல் பட்டதாரிகள் வரை அனைத்து தரப்பினரும் நல்ல வரவேற்புகளை அளித்து வருகின்றனர். இதுகுறித்த நடவடிக்கைகள் பற்றிய முக்கிய தகவல் இன்றைய வேளாண் பட்ஜெட்டில் இடம்பெறும் என அனைவரும் எதிர்பார்த்து உள்ளனர். இதைத்தொடர்ந்து இன்றுடன் பட்ஜெட் தாக்கலும் முடிவுக்கு வருகிறது. இதுகுறித்த விவாதங்கள் நாளை மறுநாள் முதல் சட்டப்பேரவையில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here