மருந்தகங்களுக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு.., இனி இதை செய்தால் லைசன்ஸ் கேன்சல்.., தமிழக அரசு அதிரடி!!!

0
மருந்தகங்களுக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு.., இனி இதை செய்தால் லைசன்ஸ் கேன்சல்.., தமிழக அரசு அதிரடி!!!
இந்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியம் கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் உள்ள அனைத்து மருந்தகங்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. குறிப்பாக மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் பொதுமக்களுக்கு எந்த ஒரு மருந்தினையும் விற்பனை செய்யக் கூடாது எனவும் எச்சரித்து வருகின்றனர். மேலும் வலி நிவாரணி மருந்துகளை மருத்துவரின் அறிவுரை இல்லாமல் நோயாளிகள் உட்கொள்வதால் பல்வேறு விளைவுகளும் வருவதாக தெரிவித்தனர். தற்போது இதை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து மருந்தகங்களுக்கும் தமிழக அரசு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
அதாவது இனி வரும் நாட்களில் மருத்துவர்களின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்துகளை விற்பனை செய்யக்கூடாது. ஒரு வேளை மருத்துவரின் அறிவுரை இல்லாமல் விற்பனை செய்யும் மருந்தகங்கள் மீது மருந்து விதிகள் 1945 இன் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் சமீபத்தில் மட்டும் தமிழகத்தில் உள்ள மருந்தகங்களை ஆய்வு செய்ததில் 9 மருந்து நிறுவனங்கள் மருத்துவர் பரிந்துரை இல்லாமல் மாத்திரைகளை விற்பனை செய்துள்ளனர். இதனால் அவர்களது உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதே தவறை மீண்டும் எந்த மருந்து நிறுவனங்களும் செய்தாலும் அவர்களது உரிமை ரத்து செய்யப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here