தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் நாளை முழு விடுமுறை – மாவட்ட நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

0
தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் நாளை முழு விடுமுறை - மாவட்ட நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

நீலகிரி மாவட்டம் ஊட்டியில், 124 மலர் கண்காட்சி நாளை தொடங்க உள்ள நிலையில், இதனை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் விடுமுறை:

தமிழகத்தில், நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ஆண்டுதோறும் மலர் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக, கொரோனா பரவல் காரணமாக இந்த மலர் கண்காட்சி நடத்தப்படவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான, 124-வது மலர் கண்காட்சி நாளை ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் தொடங்க உள்ளது. இந்த கண்காட்சியை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் துவக்கி வைக்க உள்ளார். நாளை தொடங்கும் இந்த கண்காட்சி, மே 24 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதையடுத்து, மே 20ம் தேதியான நாளை நீலகிரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நாளில், 10 ,11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடக்கும் என்றும், மாவட்ட கருவூலம் மற்றும் பிற அலுவலகங்கள் குறிப்பிட்ட பணியாளர்களுடன் இயங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு கட்டும் பொருட்டு, ஜூன் 4ஆம் தேதி முழு வேலை நாள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here