உதகையில் மண்சரிவு ஏற்பட்டு விபத்து., 6 பெண்கள் உயிரிழப்பு., நிவாரணம் அறிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!!!

0
உதகையில் மண்சரிவு ஏற்பட்டு விபத்து., 6 பெண்கள் உயிரிழப்பு., நிவாரணம் அறிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!!!

தமிழகத்தில் அவ்வப்போது ஏற்படும் இயற்கை பேரிடர்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்த வகையில் நீலகிரி மாவட்டம் உதகையில் இன்று (பிப்.7) நண்பகல், தனியாருக்கு சொந்தமான இடத்தில் கட்டுமான வேலை நடைபெற்றுக் கொண்டிருந்த போது திடீரென மண் சரிவு ஏற்பட்டது. அப்போது வேலை பார்த்து வந்த 17 கட்டுமான தொழிலாளர்கள் விபத்துக்குள் சிக்கியதில், ஆறு பெண் தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

அதோடு 2 பெண்கள் உட்பட 4 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த செய்தி அறிந்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிகுந்த வேதனை அளிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சமும், படு காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000மும் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

Enewz Tamil WhatsApp Channel 

வீரியமெடுக்கும் கொரோனா தொற்று., உச்சம் தொடும் பலி எண்ணிக்கை., வெளியான ஷாக்கிங் அப்டேட்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here