Gpay, Phonepe பயன்படுத்துபவரா நீங்கள்? அச்சச்சோ.. அப்போ இந்த ஷாக் நியூஸ் உங்களுக்கு தான்!!

0
கூகுள் பே, போன் பே உள்ளிட்டவைகளுக்கு இனி கட்டணம் - மத்திய நிதி அமைச்சர் அதிரடி விளக்கம்!!

கூகுள் பே, போன் பே போன்ற யுபிஐ பரிவர்த்தனை முறைகளுக்கு, விரைவில் கட்டணம் வசூலிக்கும் முறையை அறிமுகப்படுத்த ரிசர்வ் வங்கி முடிவெடுத்துள்ளது.

ரிசர்வ் வங்கி  அதிரடி:

உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான மக்கள்  UPI எனப்படும் டிஜிட்டல் ஆன்லைன் பரிவர்த்தனை முறைகளை பயன்படுத்தி வருகின்றனர். மத்திய அரசு கொண்டு வந்த டிஜிட்டல் இந்தியா என்ற திட்டத்தின் கீழ், பெரும்பாலான மக்கள் கூகுள் பே, போன் பே போன்ற ஆன்லைன் பரிவர்த்தனை முறைகளை பயன்படுத்துகின்றனர். கடந்த 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் 11ஆம் தேதி முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் என்பவரால் தொடங்கப்பட்ட இந்த ஆன்லைன் பரிவர்த்தனை முறைகள் இதுவரை கட்டணமில்லா சேவையாக இயங்கி வந்தது.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

தற்போது பயனர்களுக்கு அதிர்ச்சி தரும் விதமாக, UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிப்பது குறித்து  பங்குதாரர்களிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது. இந்த செயல் பயனர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் முறைப்படுத்தப்பட்ட தொகை வரம்புகள் அடிப்படையில், பல்வேறு கட்டணம் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here