கோவில் சொத்துக்களை இணையத்தில் பதிவேற்ற – அற நிலையத்துக்கு அமைச்சர் உத்தரவு!!!

0

அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில் சொத்துக்களை இணையத்தில் பதிவேற்ற அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

கோவில் சொத்துக்களை இணையத்தில் பதிவேற்ற:

கோவில்களுக்கு சொந்தமான சொத்துக்களின் குத்தகை விவரங்களையும், குத்தகை பங்குதாரர்கள், ஆக்கிரமிப்பாளர்கள் என கோவில் சம்பந்தப்பட்ட அனைத்து  விவரங்களையும் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய அத்துறையின் அமைச்சர் சேகர்பாபு உத்தரவிட்டுள்ளார்.

இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் அலுவலகத்தில் அமைச்சர் சேகர்பாபு தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது;  அப்போது பேசிய அவர் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் குத்தகை விவரங்களையும் மற்றும் கோயில் நிர்வாகம், அலுவலர்கள், திருப்பணிகள் மற்றும் விழாக்கள் அனைத்தையும் இணையத்தில் பதிவேற்ற வேண்டும் என்று கூறினார்.

மேலும் கோயில் பெயரில் உள்ள அசையும் மற்றும் அசையா சொத்துகளின் உரிமை ஆவணங்களை ஸ்கேன் செய்து இணையத்தில் பதிவேற்ற வேண்டும்; அதுமட்டுமல்லாமல் கோயில் நிலங்கள் மற்றும் கட்டடங்களின் விவரங்கள் என இந்து கோவில்களுக்கு சம்பந்தப்பட்ட எல்லாவற்றையும் ஆன்லைன் மூலமாக இணையத்தில் வெகுவிரைவாக பதிவேற்ற வேண்டும் என அமைச்சர் சேகர்பாபு உத்தரவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here