சமீப நாட்களாக ஆன்லைனில், புதுவிதமான மோசடி ஒன்று நடந்து வருவதாக பொதுமக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
காவல்துறை வார்னிங்
வளர்ந்து வரும் இந்த நவீன யுகத்தில், பொதுமக்கள் பலரும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை அதிகம் பயன்படுத்துகின்றனர். நொடி பொழுதில் நடக்கும் இந்த பரிவர்த்தனைகளில், சில நேரங்களில் மோசடியும் நடக்கத்தான் செய்கிறது. அந்த வகையில் சமீப நாட்களாக இதில், முக்கிய மோசடி ஒன்று நடந்து வருவதாக காவல்துறை எச்சரித்துள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அதாவது மோசடியாளர்கள், ஒரு நபரின் வங்கி கணக்கிற்கோ அல்லது Gpay நம்பருக்கோ குறைந்த அளவில் பணத்தை அனுப்பிவிட்டு, தவறுதலாக அனுப்பி விட்டோம். ப்ளீஸ், உடனே திருப்பி அனுப்புங்க என, தொடர்பு கொள்கிறார்கள். அவ்வாறு பணத்தை திருப்பி அனுப்பினால், அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டு மொத்த பணமும் கொள்ளை அடிக்கப்படுகிறது.
குஜராத் பகுதியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.,வீடுகளை விட்டு வீதியில் தஞ்சமடைந்த மக்கள்!!
எனவே, பொதுமக்கள் இதில் உஷாராக இருக்க வேண்டும் எனவும் இது போன்ற அழைப்புகள் வந்தால் காவல் நிலையத்தில் வந்து கம்ப்ளைன்ட் செய்து உங்கள் பணத்தை பெற்றுக் கொள்ளுங்கள் என, அவர்களை அழைக்க வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.