
மக்கள் ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கு அதிகம் பயன்படுத்தும், செயலிகளில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் உடனே என்ன செய்வது என்பதை கீழே பார்க்கலாம்.
முழு விவரங்கள்:
நாடு முழுவதும் பெரும்பாலான, மக்கள் ஆன்லைன் பரிவர்த்தனைகளை அதிகம் பயன்படுத்துகின்றனர். சில நேரங்களில் G pay, paytm, phonepe போன்ற ஆன்லைன் செயலிகளை பயன்படுத்தும்போது, நெட்வொர்க் பிஸி போன்ற தவிர்க்க முடியாத சில காரணங்களால் பரிவர்த்தனைகள் பாதியிலே நின்று போகும். இது போன்ற நேரங்களில், உடனே நாம் என்ன செய்வது என்பதை கீழே பார்க்கலாம்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
அந்த வகையில், நாம் ஆன்லைன் பரிவர்த்தனை செய்யும் போது பணம் கழிக்கப்பட்ட பின் ட்ரான்ஸாக்ஷன் பாதியிலேயே நிற்பது, வரம்பு மீறப்படுவது, பரிவர்த்தனை போய்க்கொண்டிருக்கும் போதே நேரம் முடிந்து போவது இதுபோன்ற புகார்கள் இருந்தால் NPCI ல் உடனே புகார் அளிக்கலாம்.
தாய்க்கு பிள்ள தப்பாம பொறந்திருக்கு., பாரதி கண்ணம்மா வெண்பாவுக்கே டப் கொடுக்கும் அவரின் மகன்!!
பயனர்கள் தங்கள் மொபைல் எண், மின்னஞ்சல் ஐடி, பரிவர்த்தனை மதிப்பு, முகவரி ஆகியவற்றை குறிப்பிட்டு புகார் செய்யலாம். NPCI கணக்கை புதிதாக தொடங்கவோ அல்லது திரும்ப பெறவோ முடியவில்லை என்றாலும், UPI கணக்கில் லாகின் செய்ய முடியவில்லை என்றாலும், ரிஜிஸ்டர் செய்ய முடியவில்லை என்றாலும் நீங்கள் புகார் செய்யலாம். இது சார்ந்த அனைத்து கம்பளைண்டுகளையும், NPCI கணக்கில் எடுத்துக் கொண்டு உரிய நேரத்தில் பயனர்களுக்கு பதில் அளிக்கும். எனவே பயனர்கள், இந்த விவரங்களை மறக்காமல் தெரிந்து கொள்ளவும்.