ஆன்லைன் ஷாப்பிங்கில் புதிய விதிகள்: அமேசான், டாடா நிறுவனங்கள் கவலை!!!

0

ஈ- காமர்ஸ் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவித்த புதிய விதிகளால்  தொழிலில் கடுமையான இழப்பு ஏற்படும் என்று ஈ- காமர்ஸ் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

அமேசான், பிளிப்கார்ட், ஸ்னாப்டீல் உள்ளிட்ட ஆன்லைன் ஷாப்பிங் தளங்களுக்கு கடந்த மாதம் 21 ஆம் தேதி மத்திய அரசு புதிய விதிகளை அறிவித்தது. அதிரடி விலை குறைப்பு,  பல்வேறு சலுகை, கவர்ச்சிகரமான விளம்பரங்கள் என வாடிக்கையாளர்களை போட்டிப்போட்டு கொண்டு பொருட்கள் வாங்க வைக்க ஈ- காமர்ஸ் நிறுவனங்கள் பல்வேறு யுத்திகளை கையாண்டு வருகின்றன.

இதனால் வாடிக்கையாளர்களும் அவசர அவசரமாக பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் முறைகேடு நடப்பதாகவும், தரமற்ற பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகவும் வாடிக்கையாளர் தரப்பில்  புகார்கள் எழுந்துள்ளன. இதை விசாரித்த நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சகம் ஆன்லைன் ஷாப்பிங் வர்த்தகத்தை சீர் செய்ய முடிவு செய்தது. இது குறித்து நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சகமும் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபடும் அதிகாரிகளும் ஆலோசனை நடத்தினர்.

அப்போது நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சகத்தின் ஈ- காமர்ஸ் நிறுவங்களுக்கான புதிய விதிகள் தொடர்பான கருத்துக்களை தெரிவிக்க கடைசி நாளான ஜூலை 6  ஆம் தேதியை நீடிக்கவேண்டும் என தனியார் நிறுவன அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர். ஏற்கனவே கொரோனவால் இழப்பை சந்தித்த ஈ- காமர்ஸ் நிருவனங்கள் புதிய விதிகளை அமல்ப்படுத்தினால் மேலும் பாதிப்பு ஏற்படும் என்று அமேசான், டாடா நிர்வாகிகள் கவலை தெரிவித்து உள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here