சோசியல் மீடியா விளம்பரங்களுக்கு ஆப்பு – மத்திய அரசு கொண்டு வந்த புதிய கட்டுப்பாடுகள்!!

0
சோசியல் மீடியா விளம்பரங்களுக்கு ஆப்பு - மத்திய அரசு கொண்டு வந்த புதிய கட்டுப்பாடுகள்!!

சமூக வலைதளங்கள் மூலம், ஆன்லைனில் விற்கப்படும் பொருட்களுக்கு செய்யப்படும் விளம்பரங்கள் குறித்த புதிய கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துள்ளது.

புதிய கட்டுப்பாடுகள்:

வளர்ந்து வரும் நவீன யுகத்தில், சமூக வலைதளங்கள் வாயிலாக  பெரும்பாலான பொருட்களை நுகர்வோர் ஆன்லைன் வாயிலாக வாங்குகின்றனர். இந்த பொருட்களுக்காக, சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங்கில் இருக்கும் பிரபலங்களை வைத்து  சம்பந்தப்பட்ட நிறுவனம் விளம்பரம் செய்கிறது.  சமீப காலமாக இந்த விளம்பரம் மற்றும் ஆன்லைன் விற்பனையில் பல்வேறு மோசடிகள் நடந்து வருகிறது.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

இது குறித்து ஆய்வு செய்த மத்திய நுகர்வோர் நலத் துறை புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி குறிப்பிட்ட பொருளுக்கு விளம்பரம் செய்யும் பிரபலம், அந்த நிறுவனத்துடன் தனக்குள்ள தொடர்பு குறித்து பதிவிட வேண்டும் என அறிவித்துள்ளது. அது மட்டுமில்லாமல், ஒரு பொருளை வாங்கும் முன், அந்தப் பொருள் குறித்து மற்ற நுகர்வோரின் விமர்சனங்களை பெரும்பாலானோர் பார்க்கின்றனர்.

ஆனால், அந்த விமர்சனங்களில் சமீப காலமாக மோசடிகள் நடந்துள்ளதாகவும், அவைகளை தடுக்க புதிய கட்டுப்பாடுகள் அறிமுகமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் அடுத்த 15 நாட்களில் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here