நடிகர் சரத்குமார் ஆணவ பேச்சு – இதை செய்தால் இனி நான் நடிக்கவே மாட்டேன்! கொந்தளித்த நெட்டிசன்கள்!!

0
நடிகர் சரத்குமார் ஆணவ பேச்சு - இதை செய்தால் இனி நான் நடிக்கவே மாட்டேன்! கொந்தளித்த நெட்டிசன்கள்!!

ஆன்லைன் ரம்மி விளையாட்டு குறித்து, நடிகர் சரத்குமார் தெரிவித்த கருத்து பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில், வெறுப்பலைகளை கிளப்பி உள்ளது.

பொதுமக்கள் வெறுப்பு:

தமிழ் திரை உலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சரத்குமார். இவர் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில், அண்மையில் தயாரான  பொன்னியின் செல்வன் படத்தில் பெரிய பழுவேட்டரையர்  என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல், ஒரு சில விளம்பரங்களிலும் நடித்துள்ளார். அந்த வகையில் ஆன்லைன் சூதாட்டமான ரம்மி விளம்பரத்தில் நடித்தார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்த ஆன்லைன் விளையாட்டால் பல தற்கொலைகள் நிகழ்ந்திருப்பதாகவும், மக்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாகவும்  தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்தது. இந்த ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய தமிழக அரசு பொது மக்களிடம் கருத்து கேட்பு, கூட்டத்தை அண்மையில் நடத்தியது. தற்போது, இந்த ரம்மி குறித்து, நடிகர் சரத் முக்கிய கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

அதாவது, ஆன்லைன் ரம்மியை தடை செய்தால், இனி தான் அந்த விளம்பரங்களில் நடிக்கப் போவதில்லை என தெரிவித்துள்ளார். இதை பார்த்த பொதுமக்கள், இதனால் எவ்வளவு குடும்பங்கள் சீரழிந்துள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள், இது தேவையற்ற வீண்பேச்சு என அவரது கருத்துக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here