ஆன்லைனில் காவலர் தேர்வு?? சீருடைப் பணியாளர் தேர்வாணையம் திட்டம்!!

5

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் தனியார் நிறுவன உதவியுடன் காவலர் தேர்வினை ஆன்லைனில் நடத்த திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது குறித்து பரிந்துரைகள் கேட்கப்பட்டு உள்ளது.

ஆன்லைனில் காவலர் தேர்வு:

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்குநாள் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. 2 லட்சத்தை தாண்டி உள்ள கொரோனா தொற்று எண்ணிக்கையால் அரசு தீவிர தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா தொற்று காரணமாக பள்ளி, கல்லூரிகளின் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. மேலும் பல அரசு பணியாளர் தேர்வுகள் மற்றும் நுழைவுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு உள்ளன. இதனால் வரும் காலங்களில் ஆன்லைனில் தேர்வுகள் நடத்த ஆணையங்கள் தயாராகி வருகின்றன.

இந்நிலையில் தனியார் நிறுவன உதவியுடன் ஆன்லைன் வழியாக காவலர் தேர்வினை நடத்த தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் திட்டமிட்டு வருகிறது. மேலும் இது தொடர்பாக அனைத்து மாவட்ட கண்காணிப்பாளர்கள் மற்றும் துணை ஆணையர்கள் உட்பட அனைத்து காவலர்களிடம் பரிந்துரைகள் கேட்கப்பட்டு உள்ளன. அவர்கள் வழங்கும் கருத்துக்கள் அடிப்படையில் கிரேடு-2 காவலர், கிரேடு-2 சிறை வார்டன் மற்றும் உதவி ஆய்வாளர் தேர்வுகளை ஆன்லைனில் நடத்த ஆலோசனை நடைபெற்று வருகிறது. இது குறித்து அனைத்து மாவட்ட எஸ்.பி.,க்களும் தலா 50 காவலர்களிடம் கருத்துக்கேட்டு வரும் 31ம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டு உள்ளது.

5 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here