QR ஸ்கேன் மூலம் பணம் செலுத்துபவரா நீங்கள்? கண்டிப்பாக இதை பாருங்க! இல்லைன்னா உங்க நிலையும் இதுதான்!!

0
QR ஸ்கேன் மூலம் பணம் செலுத்துபவரா நீங்கள்? கண்டிப்பாக இதை பாருங்க! இல்லைன்னா உங்க நிலையும் இதுதான்!!
QR ஸ்கேன் மூலம் பணம் செலுத்துபவரா நீங்கள்? கண்டிப்பாக இதை பாருங்க! இல்லைன்னா உங்க நிலையும் இதுதான்!!

பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும், டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் QR Code, வாயிலாக நடக்கும் மோசடி சம்பவங்கள் குறித்து, பயனர்கள் அறிந்து கொள்ளும் வகையில் கீழே தெளிவான விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

பயனர்கள் எச்சரிக்கை:

பொது மக்கள் அன்றாடம் பயன்படுத்தும், டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைக்கான QR ஸ்கேன் குறியீட்டில் சமீபகாலமாக பல்வேறு மோசடிகள் நடந்து வருகிறது. இது குறித்து, பல்வேறு குற்றச்சாட்டுக்கள் பதிவாக இருந்தாலும், பொதுமக்களுக்கு போதுமான விழிப்புணர்வு கிடைப்பதில்லை. அந்த வகையில், ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிப்பதற்கான வழிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

  • ஆன்லைன் மோசடி செய்பவர்கள், இந்த QR ஸ்கேன் குறியீட்டை அனுப்பி, உங்களுக்கு பணப் பரிசு கிடைத்திருக்கிறது என்று கூறி அதை ஸ்கேன் செய்யச் சொல்கிறார்கள். அவ்வாறு செய்தால் அடுத்த நிமிடமே வங்கிக் கணக்கிலிருந்து பணம் காலியாக தொடங்குகிறது. இது போல் ஏதேனும் கால் வந்தால் அதை தவிர்ப்பது நல்லது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
  • பயனர்கள் தங்களுடைய  UPI ஐடி அல்லது வங்கி கணக்கு விவரங்களை தெரியாத நபரிடம் பகிர வேண்டாம், வங்கி அல்லாத பிற நபர்களிடம் இருந்து பெறப்பட்ட எந்தக் QR குறியீட்டையும் ஸ்கேன் செய்ய வேண்டாம்.
  • OTP எண்ணை யாருக்கும் எப்போதும் பகிர வேண்டாம், OLX  போன்ற ஆன்லைன் விற்பனை தளத்தை பயன்படுத்தும் போது, சம்பந்தப்பட்டவர்களின் சுயவிவரப் புகைப்படம், பெயர், தொலைபேசி எண்  முதலியவற்றை ஆராய்வது அவசியம்.
  • UPI முறையை பயன்படுத்துவோர், ரகசிய குறியீட்டை பாதுகாப்பது அவசியம் என்றும், பின் நம்பர் இல்லாமல் இதை பயன்படுத்த வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.
  • முன்பின் தெரியாத நபருடன் பணப்பரிமாற்றத்தை மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும், இதுபோன்ற குற்றங்களில் சிக்கிக்கொண்டால், உடனடியாக சைபர் கிரைம் க்கு தகவல் அளிக்க வேண்டும் என்பதை மறக்க வேண்டாம்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here