உடனடி லோன் வழங்கும் சட்டவிரோத ஆப்களுக்கு ஆப்பு – மத்திய நிதி அமைச்சர் அதிரடி அறிவிப்பு!!

0
உடனடி லோன் வழங்கும் சட்டவிரோத ஆப்களுக்கு ஆப்பு - மத்திய நிதி அமைச்சர் அதிரடி அறிவிப்பு!!

இந்தியாவில் உடனடி லோன் வழங்கும் பல சட்டவிரோத ஆன்லைன் ஆப்களை முடக்கி, அவற்றின் மீது சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

நிதி அமைச்சர் அதிரடி:

இந்தியாவில் சமீப தினங்களாக  பிளே ஸ்டோரில் உள்ள  Instant Loan Apps வழியாக கடன் வழங்கப்படுகிறது. ஆனால் இவைகளை, சரிவர செலுத்த முடியாத பயனர்களிடம் இந்த ஆப்களை சேர்ந்த கும்பல் தாக்குதல் நடத்துகின்றனர். இதனால், பல மாநிலங்களில் தற்கொலைகள் நிகழ்ந்து வருகிறது. இந்த, ஆன்லைன் லோன் ஆப்கள் குறித்த அனைத்து நடவடிக்கைகளையும் சரி பார்த்து இந்திய ரிசர்வ் வங்கி “ஒயிட்லிஸ்ட்” ஒன்றை தயாரிக்க உள்ளது.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

இதன் மூலம், ப்ளே ஸ்டோர்களில் உள்ள சட்டவிரோத ஆப்கள் நீக்கப்பட உள்ளது. இதுகுறித்து பேசிய மத்திய நிதியமைச்சர், பண மோசடியில் ஈடுபடும் நிதி நிறுவனங்கள் அல்லது என்பிஎப்சிகளை ரத்து செய்யும் அதிரடி நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி தொடங்கியுள்ளதாகவும், இந்த நடவடிக்கையில் சட்ட வல்லுநர்கள் மற்றும் பங்குதாரர்கள் இணைந்து  செயல்பட வேண்டும் என்றும்  தெரிவித்துள்ளார். இதையடுத்து, இந்த லோன் ஆப்கள் விரைவில் நீக்கப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here