தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்கு தடை.., சட்டத்துறை அமைச்சர் உறுதி!!!

0
தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்கு தடை.., சட்டத்துறை அமைச்சர் உறுதி!!!
தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்கு தடை.., சட்டத்துறை அமைச்சர் உறுதி!!!

இந்தியாவில் பெரும்பாலான பகுதிகளில் ஆன்லைன் ரம்மி விளையாட்டால் மக்கள் பணத்தை இழந்து தற்கொலை செய்து வருகின்றனர். இந்த தற்கொலை சம்பவம் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களிலும் அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் கடந்த அக்டோபர் மாதம் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி தலைவர்கள் இருவரும் ஒருசேர ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை மசோதாவை நிறைவேற்றி ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி இருந்தனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

ஆனால் “ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்கு தடை விதிக்க மத்திய அரசுக்கு மட்டுமே உரிமை உண்டு. தமிழக அரசுக்கு அந்த உரிமை இல்லை.” என ஆளுநர் ஆர்.என்.ரவி தடை மசோதாவை திருப்பி அனுப்பி விட்டார். இருந்தாலும் 2வது முறையாக மாநில சட்டப்பேரவையில் அதே மசோதா நிறைவேற்றப்பட்டால் ஆளுநர் ஒப்புதல் வழங்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் இன்று நடைபெறும் பட்ஜெட் கூட்டத்தொடரில் மீண்டும் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை.., ஜாமீன் கொடுத்து அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்!!!

இந்நிலையில் தமிழ்நாட்டை போல புதுச்சேரி மாநிலத்திலும் பெரும்பாலானோர் ஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை இழந்து தற்கொலை செய்து வருகின்றனர். இதனால் புதுச்சேரியிலும் ஆன்லைன் ரம்மிக்கு தடை மசோதா நிறைவேற்ற வேண்டும் என சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் சிவா கவன ஈர்ப்பு தீர்மானத்தை முன்வைத்துள்ளார். எனவே ஆன்லைன் தடை மசோதா கண்டிப்பாக நிறைவேற்றப்படும் என அம்மாநில சட்டத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் உறுதி அளித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here