தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா நாளை மீண்டும் தாக்கல்., முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி!!!

0
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா நாளை மீண்டும் தாக்கல்., முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி!!!
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா நாளை மீண்டும் தாக்கல்., முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி!!!

தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு மூலம் பெரும்பாலானோர் பணத்தை இழந்து மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். இதனால் தற்கொலை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் அவல நிலையும் ஏற்பட்டு வருகிறது. எனவே கடந்த அக்டோபர் மாதம் தமிழக சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்கு இடைக்கால தடை மசோதா நிறைவேற்றப்பட்டது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதற்கான ஒப்புதல் அளிக்காமல் 3 மாதங்களுக்கும் மேலாக ஆளுநர் ஆர்.என்.ரவி கிடப்பில் வைத்து இருந்தார். கடந்த மார்ச் 8ம் தேதியன்று “ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்கு தடை விதிக்க தமிழக அரசுக்கு உரிமை இல்லை” என மசோதாவை திருப்பி அனுப்பி விட்டார். ஆனால் சட்டப்பேரவையில் 2வது முறையாக மசோதா நிறைவேற்றப்பட்டால் அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தாக வேண்டிய நிலை உள்ளது.

பயணிகளுக்கு சூப்பர் நியூஸ்., முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கம்., எதற்காக தெரியுமா??

இந்நிலையில் நடைபெற்று வரும் 2023-24 ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரில் நாளைய (மார்ச் 23) தினம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் சட்டப்பேரவையில் தடை மசோதாவை தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இதில் தடை குறித்த ஆளுநரின் கேள்விகளும், அதற்குரிய தமிழக அரசின் விளக்கங்களும் இடம்பெற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே நாளை இது குறித்த விவாதம் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here